கடிக்கத் தெரிஞ்சா கடி.. காதுகிட்ட வந்து ங்ஙொய்ய்னு கத்தி அடிவாங்கி சாகாத.. புரிஞ்சதா?
சென்னை : கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை என சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
வெயில் காலம் எப்போது வரும் மக்கள் பெரும்பாலும் எதிர்பார்க்க ஒரே காரணம் இந்த கொசுத் தொல்லைதான். மழைக்காலத்தில் கொசுவின் தொல்லை அதிகமாக இருக்கும் என்பதால், இதற்கு வெயிலே பரவாயில்லை என வெயில் காலத்தை மக்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இப்போது கொசுக்களும் வெயில் காலத்திற்குப் பழகி விட்டது போல. அதனால்தான், பகலில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்ட போதும், இந்தக் கொசுத் தொல்லை முடிந்த பாடில்லை.
இந்தக் கொசுவை எப்படியெல்லாம் ஒழிக்கலாம் என நாம் ஒவ்வொரு வழியையும் முயற்சித்துப் பார்த்துக் கொண்டிருக்க, பிலிப்பைன்ஸ் நாட்டில் கொசுவை உயிருடனோ அல்லது கொன்றோ ஒப்படைத்தால், 5 கொசுவுக்கு நம்மூர் மதிப்பில் ரூ. 1.50 வழங்கப்படும் என அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர்.
அட கொசுவுக்கு காசா? என சமூகவலைதளங்களில் இந்தச் செய்தி ஒருபுறமும் பேசு பொருளாகி இருக்க, வழக்கம் போல் இதைப் பார்த்ததும் நம் நெட்டிசன்களுக்கு கொசு பற்றிய மீம்ஸ்களின் ஞாபகம் வந்து விட்டது போலும். அதனால்தான் பழையதாக இருந்தாலும், அவற்றை தூசி தட்டி, தற்போது மீண்டும் பகிர்ந்து, 'இந்தக் கொசுத் தொல்லை தாங்கலைடா நாராயணா" என புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில கொசு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications