மழை வந்துட்டாலே.. என்னை சமாளிக்க முடியலைல.. இப்டி கெத்தா சொல்றது யாரு தெரியுமா?
இரவில் கொசு படுத்தும் பாடுகளால் நொந்து நூடுல்ஸ் ஆகும் மொமண்ட்களை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: மழை வந்துவிட்டதால், கூடவே கொசுவும் வந்து விட்டது. பிறகென்ன, அதையும் மீம்ஸ் போட்டு பங்கம் பண்ணத் தொடங்கி விட்டனர் நம் நெட்டிசன்கள்.
மழை வந்துவிட்டாலே அழையா விருந்தாளியாக கொசுவும் கூடவே சேர்ந்து வந்து விடும். கொஞ்சம் மழைக் காற்றை ரசிக்கலாம் எனக் கதவைத் திறந்து வைத்தால், காற்றை முந்திக் கொண்டு கொசு வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. முன்பெல்லாம் மாலையில் சிறிது நேரம் கதவைச் சாத்தி வைத்தால் கொசு வராது என்பார்கள். இப்போதெல்லாம் அப்படியில்லை.
கொசுக்களும் நம்மைப் போலவே நம் வீட்டில் தங்கியே இருக்கின்றன. அதனாலேயே பகல் பொழுதுகளிலும் கொசுக்களை சர்வசாதாரணமாக பார்க்க முடிகிறது. சரி, பகலிலாவது விழித்துக் கொண்டிருப்போம், கொசு கடித்தால் அதனை அடித்து விரட்டி விடலாம். இரவில் அப்படியில்லை.
உழைத்துக் களைத்து, ஒரு வழியாக போனைக் கீழே வைத்து விட்டு, கொஞ்சம் தூங்கலாம் என நாம் கண்ணை மூடும் போது, சரியாக நம் காதுக்கு அருகில் வந்து பாட ஆரம்பித்து விடுகின்றன இந்தக் கொசுக்கள். பிறகெப்படி நிம்மதியாக தூங்க முடிகிறது. நாமளும் கவுண்டமணி மாதிரி, 'இந்தக் கொசுத் தொல்லை தாங்கலப்பா..' என புலம்பிக் கொண்டே இரவைக் கழிக்க வேண்டியது தான்.
இப்படியாக பாடாய் படுத்தும் கொசுக்களை வைத்தும் ஜாலி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இந்த மீம்ஸ்களில் பல நமது மைண்ட்வாய்ஸ் மாதிரியே இருப்பதால், ரசிக்கும்படி உள்ளது.























Click it and Unblock the Notifications