3 ஹீரோ.. 3 ஹீரோயின்.. பொன்னியின்செல்வனும், பாண்டியன் ஸ்டோர்ஸும்.. எப்டிய்யா இப்டிலாம் பீல் பண்றீங்க?
பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றி சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: பொன்னியின் செல்வன் படம் ஒருபுறம் வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்க, மறுபுறம் அப்படத்தைக் கலாய்த்து மீம்ஸ்களும் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை, மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். சோழ நாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் இடையே நடக்கும் மோதல்தான் படத்தின் கதை என்பதால், சமூகலைதளங்களில் அதையே கான்செப்ட்டாக வைத்து எந்தளவிற்கு முடியுமோ, அந்தளவிற்கு கலாய்த்து வருகின்றனர்.
கூடவே, பொன்னியின் செல்வன் படம் ரிலீசாகி இரண்டு நாட்கள்தான் ஆகிறது. ஆனால் அதற்குள்ளேயே, 'அட இன்னுமா நீங்க படத்தைப் பார்க்கவில்லை'.. என படம் பார்த்தவர்கள், பார்க்காதவர்களைப் பார்த்து, தாங்கள் ஏதோ பெரிய சாதனை செய்து விட்டது போல், பெருமிதத்தோடு கேட்டுக் கொள்கிறார்கள். இவர்களின் அக்கப்போரைத் தாங்க முடியாமல், சமூகவலைதளங்களில் ஒரு குரூப், 'முடியல.. வேணா.. அழுதுருவேன்..' என்ற ரேஞ்சுக்கு மீம்ஸ் போட்டு ஃபீல் பண்ணி வருகிறது.
இப்படியாக சமூகவலைதளங்களில் பொன்னியின் செல்வன் படம் பற்றிய விமர்சனங்களுக்கு இணையாக, படத்தைப் பற்றிய மீம்ஸ்களுக்கும் பஞ்சமேயில்லை. இதோ, அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications