ரிசல்ட் வந்தது ஒரு குத்தமாடா.. உடனே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டீங்களே!
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், வழக்கம் போல் தேர்வு நினைவுகள், தேர்வு முடிவுகள் என விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒவ்வொரு வகுப்பை முடித்து, அடுத்த வகுப்பிற்கு செல்லும் போதும், 'இதற்கு போன வருட பாடங்களே பரவாயில்லை.. சுலபமாக இருந்தது.. இப்போது மிகவும் கடினமாக இருக்கிறதே' என மாணவர்கள் புலம்புவார்கள். ஆனால் பள்ளி, கல்லூரி எல்லாம் முடித்தபிறகு, 'பேசாமல் குழந்தைகளாகவே இருந்திருக்கலாம்.. அப்போது படிப்பதைத் தவிர வேறு கவலை எதுவும் இருக்கவில்லை' என பழைய நினைவுகளை நினைத்து ஏங்குவார்கள்.
அதனால்தான், தேர்வு நடந்தாலும் சரி, தேர்வு முடிவுகள் வெளியானாலும் சரி, உடனே தனக்குத் தெரிந்த மாணவர்களின் மதிப்பெண்களை எல்லாம் கேட்கத் தொடங்கி விடுவார்கள். வெறுமனே கேட்டால்கூட பரவாயில்லை, 'நானெல்லாம் அந்தக் காலத்துல..' என்பதில் ஆரம்பித்து, 'பேசாம அடுத்து இதப் படியேன்.. நல்ல எதிர்காலம் இருக்கும்' என்பது வரை விதவிதமாக கதையளக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இப்போதும் அப்படித்தான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், அந்த மாணவர்களுக்கு வாழ்த்துகளை ஒருபுறம் தெரிவித்துக் கொண்டே, மற்றொரு புறம் பார்டரில் பாஸான தங்களது பிளாஷ்பேக்குகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

"ரிசல்ட் வந்தது ஒரு குத்தமாடா.. உடனே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டீங்களே!" என்றும், "ரொம்ப பயங்கரமான படிப்பாளியா இருப்பானோ.. படிப்பு கெட்டுட கூடாதுனு புக்ஸை பிரிட்ஜ்ல வச்சிருக்கான்!" என்றும் விதவிதமாக நகைச்சுவை மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications