மரணபீதினா என்னன்னு தெரியுமா.. கணக்கு டீச்சர் போர்டுல எழுத சொல்லும்போது வரும்ல.. அதான்!
சென்னை : பல வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், வழக்கம் போல் நம் பள்ளி மாணவர்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பிடித்ததும் பொதுத்தேர்வு தான், பிடிக்காததும் பொதுத்தேர்வுதான். ஏனென்றால் ஆண்டு முழுவதும் படித்ததை எல்லாம் இந்த தேர்வில் எழுத வேண்டும் என்பதும், இந்தத் தேர்வில் தோல்வியுற்றால் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும் என்பதும், பொதுத்தேர்வைப் பிடிக்காமல் போவதற்குரிய காரணங்கள்.
ஆனால், இந்த தேர்வை முடித்து விட்டால், ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை கோடை விடுமுறை கிடைக்கும். "கொலம்பஸ்.. கொலம்பஸ் விட்டாச்சு லீவு" என ஜாலியாக பாட்டுப் பாடிக் கொண்டு வீட்டில் இருக்கலாம்.. இது பொதுத்தேர்வை மிகவும் பிடிப்பதற்கு ஒரு காரணம். எது எப்படியோ பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பொதுத்தேர்வை எழுதித்தான் ஆக வேண்டும் என மாணவர்கள் ஒருபுறம் சின்சியராக படித்துக் கொண்டிருக்க, வழக்கம் போல் நம் நெட்டிசன்கள் பள்ளி மாணவர்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர்.
"மரணபீதினா என்னன்னு தெரியுமா.. கணக்கு டீச்சர் போர்டுல எழுத சொல்லும்போது வரும்ல.. அதான்!" என்றும், "ஒரு போன் பண்ண மாட்டான்.. நேர்ல பார்த்தா டீ வாங்கிதர மாட்டான்.. வாட்சப்ல மட்டும் 'மிஸ்ஸிங் ப்ரண்ட்ஸ்'!" என வகுப்பறை அலப்பறைகளையும், நட்பின் ஆழத்தையும் விதவிதமான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications