வாழ்க்கைல விழுந்து எந்திரிக்கறதைவிட.. காலைல தூக்கத்துல இருந்து எந்திரிக்கறதுதான் கஷ்டமா இருக்கு!
இரவில் தூக்கம் வரவில்லை என்பதை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: 'சரியா தூங்கவே முடியலை பாஸ்..' என சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இரவில் தூக்கம் வராமல் தவிப்பது, சர்வதேச பிரச்சினைகளில் ஒன்றாகி விட்டதோ என பயப்படும் அளவிற்கு இருக்கிறது சமூகவலைதளங்களில் வரும் பதிவுகளைப் பார்த்தால். வர வர மருத்துவர்களே, எந்த நோய்க்கு சிகிச்சைக்குச் சென்றாலும், 'ஒழுங்காக இரவில் தூங்குகிறீர்களா?' என்பதைத்தான் முதல் கேள்வியாகவே கேட்கிறார்கள். அந்தளவிற்கு நம்மில் பெரும்பாலானோர் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளோம்.
ஆனால் இதற்கு நேர்மாறாக காலையில் எங்கிருந்துதான் அப்படி ஒரு தூக்கம் வருமோ தெரியாது. எத்தனை அலாரம் அடித்தாலும், அதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் தூங்குவார்கள். தினமும் இரவு படுக்கப் போவதற்கு முன், நாளையில் இருந்து காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என சபதம் எடுப்பார்கள். ஆனால், இரவு நன்றாகத் தூங்கினால்தானே காலையில் சீக்கிரம் எந்திரிக்க முடியும். வழக்கம் போல சூரியன் சுட்டெரிக்க ஆரம்பித்த பிறகுதான், திருச்சிற்றம்பலம் ஷோபனா மாதிரி, பலருக்கு பொழுதே விடியும்.
இப்படியாக, 'இவ்வளவு நாள் சரியாக தூக்கம் வரவில்லை.. காலையில் சீக்கிரம் எழுந்திரிக்க முடியவில்லை' என தெரிந்தவர்களிடம் எல்லாம் புலம்பி வந்தவர்கள், இப்போது ஒரு படி மேலே போய் சமூகவலைதளத்தில் மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான தூக்கம் பற்றிய சில மீம்ஸ்கள் உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications