காய்ஞ்ச கரும்பை தூக்கி குப்பைல போட்டுடுங்க பாஸ்.. அடி ஒவ்வொண்ணும் இடியாட்டம் விழுது!
பொங்கலுக்கு வாங்கிய கரும்பை வைத்தும், தை மாதத்தை வைத்தும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: பொங்கல் முடிந்து ஒரு வாரம் ஆகியும், இன்னமும் வாங்கிய கரும்பு தீரவில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

கடந்த வாரம் இந்நேரம் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். பொங்கல் கொண்டாட்டங்களுக்கு இடையே, செய்து வைத்த பொங்கல் இன்னமும் தீரவில்லை எனவும் சமூகவலைதளங்களில் புலம்பிக் கொண்டிருந்தனர். சரி, பொங்கல் முடிந்து ஒரு வாரம் ஆகி விட்டது, பொங்கலை மறந்திருப்பார்கள் என நினைத்தால், மிச்சமிருக்கும் கரும்பு அவர்களை விடுவதாயில்லை.

பல வீடுகளில் பொங்கல் தீர்ந்தாலும் கரும்பு இன்னமும் தீரவில்லை போலும். எப்போது நொறுக்குத் தீனிக் கேட்டாலும் கரும்பையே சாப்பிடச் சொல்கிறார்களே என சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இது ஒருபுறம் என்றால், 'காய்ந்த கருப்பை சீக்கிரம் தூக்கிப் போட்டு விடுங்கள்' என அனுபவசாலி கணவர்கள் மற்றவர்களுக்கு மீம்ஸ் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். காரணம் அடி ஒவ்வொன்றும் சுரீர் சுரீர் என இடி மாதிரி விழுகிறதாம்.

இப்படி கரும்பை வைத்து ஒரு குரூப் புலம்பிக் கொண்டிருக்க, 'தை பிறந்தால் வழி பிறக்கும் என்றீர்களே.. எங்கேய்யா அந்த வழி?' மற்றொரு குரூப் வித்தியாசமாகப் புலம்பிக் கொண்டிருக்கிறது.

இப்படியாக பொங்கல் முடிந்து ஒரு வாரம் கரும்பை வைத்தும், தை பிறந்ததை வைத்தும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...



-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications