வாரமெல்லாம் காய்ச்சோறு.. சன்டே வந்தா கறிச்சோறு.. ஆனா, நமக்கு எப்பவுமே கஞ்சி சோறுதான்!
ஞாயிற்றுக்கிழமை சாப்பாடு பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக நம் வீட்டில் ரசம், சாம்பார் என இப்படி சொதப்பி விட்டார்களே என ஒரு குரூப் புலம்பிக் கொண்டிருக்க, பக்கத்து வீட்டில் ஓசி வாங்கியாவது இன்று கறிச்சோறு சாப்பிட்டே ஆவது என மற்றொரு குரூப் மீம்ஸ் போட்டு தங்களது ஆதங்கத்தைக் கொட்டி வருகின்றனர்.

வீட்டில் இருக்கும் நாளாவது வாய்க்கு ருசியாகச் சாப்பிடலாம் என வேலைக்குப் போகும் ஆண்கள் நினைக்க, இந்த ஒரு நாளாவது எளிதாக சமையல் வேலையை முடித்து விட்டு மற்ற வேலையைப் பார்க்கலாம் என வேலைக்குப் போகும் பெண்கள் நினைக்கிறார்கள் போலும். அதனால்தான் பல வீடுகளில் இன்று சாம்பாரும், ரசமும் தான் மெனு என்பது மீம்ஸ்கள் மூலம் தெரிகிறது.

நம் வீட்டில் சைவம் செய்துள்ள போது, பக்கத்து வீட்டில் கமகமவென அசைவம் செய்து, அந்த வாசனை நம் வீடு வரைக்கும் வரும் போது, ஏற்படுகிற 'வேதனை இருக்கே வேதனை..' என ஒரு சில மீம்ஸ்கள் புலம்பல் ரகம். ஒரு சிலர் பக்கத்து வீட்டில் குழம்பு ஓசி வாங்கி விடலாமா என்ற ரேஞ்சுக்கே யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.

பிறகென்ன வழக்கம் போல், 'என்னம்மா இப்டி பண்றீங்களே..' என மீம்ஸ்களில் புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications