அதே அழுக்கு டிரெஸ்ஸு.. என்ன எதுவுமே மாறல? “செம மீம்”! உலகக் கோப்பை போச்சே.. சோகம் மறந்து சிரிப்போம்!
சென்னை: உலக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலியா. உலகக் கோப்பை கனவு தகர்ந்தது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும் சமூக வலைதளங்களில் பரவும் சில மீம்ஸ்கள் சோகத்தை மறக்கச் செய்கின்றன.
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே மிகச் சிறப்பாக விளையாடி வந்தது. லீக் சுற்றில் 9 ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தி, செமி ஃபைனலில் நியூசிலாந்தை விரட்டியது. இந்திய அணி தொட்டதெல்லாம் வெற்றியாக இருந்து வந்ததால், இந்த முறை கப்பு நமக்குத்தான் என இந்திய ரசிகள் மிகவும் எதிர்பார்த்தனர்.

எனினும், இறுதிப் போட்டியில், கொஞ்சம் சொதப்பி வெற்றியைத் தவற விட்டுள்ளது இந்திய அணி. வெற்றிகளைக் குவித்த இந்திய அணி, ஃபைனலில் தோற்றது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பையைப் பறிகொடுத்துள்ளதை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் தாங்க முடியவில்லை.
நரேந்திர மோடி மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களை நொறுக்கியுள்ளது. வழக்கமாக, மேட்ச் நடக்கும் நாட்களில் சமூக வலைதளங்களில் கிண்டல் மீம்ஸ்கள் பறக்கும். ஆனால், இன்று உலகக் கோப்பை நம் பிடியில் இருந்து நழுவத் தொடங்கிய நிலையில், நகைச்சுவை மீம்ஸ்களை கூட பார்க்க முடியவில்லை.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சோகம் அப்பிய முகங்களே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்த உலகக் கோப்பை தொடரில் 9 போட்டிகளில் 50க்கும் அதிகமான ரன்களை எடுத்து அசத்தினார் விராட் கோலி. ஒட்டுமொத்தமாக 765 ரன்கள் அடித்து, ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்களை பதிவுசெய்த ஒரே வீரராக விராட் கோலி மாறியுள்ளார். ஆனால், இன்றைய தோல்வியால் துவண்ட அவரது முகம் ரசிகர்களையும் கலங்கச் செய்துள்ளது.
இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக "தொடர் நாயகன்" விருது வென்ற விராட் கோலி, சோகமான முகத்துடன் காணப்பட்டார். சோகம் அப்பிய முகத்துடன் அவர் விருது பெற்றுவிட்டு, குனிந்த தலையோடு நடந்து சென்றது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 5 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்தனர். 5.1 Cr live என்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இந்திய அணியின் கையில் இருந்து கோப்பை நழுவுவது உறுதியாகத் தொடங்கியதுமே 5.1 Crying என எடிட் செய்து துயரத்தைப் பகிர்ந்தனர் ரசிகர்கள்.
"இது சிறந்த அணி. ஆனால் ஒரு மோசமான நாள் அனைத்தையும் அழித்துவிட்டது. இந்த விளையாட்டு இரக்கமற்றது" என இந்திய வீரர்களின் வருத்தம் தோய்ந்த முகத்தை பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

"போதும்டா.. டேய்.. போங்கடா... போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க... கிரிக்கெட்லாம் வேணாம்டா.." என்ற மீம், சோகத்தை கடந்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.
இன்னொரு மீம் சமூக வலைதளத்தில் இந்திய ரசிகர்களை கவலை மறந்து புன்னகைக்கச் செய்கிறது. 'மார்க் ஆண்டனி' படத்தின் டைம் டிராவல் சீனை போட்டு 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியையும் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியையும் ஒப்பிட்டுள்ளனர்.

2003ல் ரிக்கி பாண்டிங் சதம் - இன்றைய ட்ராவிஸ் ஹெட் சதம். அன்று சச்சின் டெண்டுல்கர் வென்ற "தொடர் நாயகன் விருது" இன்று இந்தியாவின் விராட் கோலிக்கு. அன்றும் இன்றும் ஆஸ்திரேலியாவின் வெற்றிக் கொண்டாட்டம். ஏன் எதுவுமே மாறல என எஸ்.ஜே.சூர்யா சொல்வது போன்ற மீம் பதிவிட்டுள்ளனர்.
Ellame same than 😰 pic.twitter.com/SfPhTkGevK
— பாக்டீரியா (@Bacteria_Offl) November 19, 2023
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications