"எனக்கு பயம் கிடையாது.. இதுதான் சாம்பிள்" போக்கிரி விஜயாக ரிஷப் பண்ட்.. தெறிக்கும் மீம்ஸ்!
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருக்கிறது. இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களை சேர்த்துள்ளது. இதனை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கியுள்ள தரமான மீம்ஸை பார்க்கலாம்.
போக்கிரி படத்தில் நடிகர் விஜய், "உன் ஆளு.. உன் இடம்.. நீ நினைச்சா என்னைய என்ன வேணாலும் பண்ணலாம்.. ஆனா எனக்கு பயம் இல்லை.. அதுக்கு இதுதான் சாம்பிள்" என்று சொல்லுவார். அதில் வரும் விஜயாக ரிஷப் பண்டை மாற்றி, "உன் ஆளு.. உன் இடம்.. 99 ரன்கள்ல இருந்தாலும், சிக்ஸ் அடிப்பேன்.. எனக்கு ஒன்னும் பயம் கிடையாது.. அதுதான் இதுதான் சாம்பிள்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஸ்பைடி சம்பவம் டா ரகம்.

விக்ரம் படத்தில் பில்டிங்கிற்கு பின்பக்கமாக நிற்கும் ஃபகத் ஃபாசில், வெட்ட வெளியாக இருப்பதை கண்டு பயத்தில் சுவற்றை பிடித்து கொள்வார். ஆனால் கமல்ஹாசன் கொஞ்சமும் அச்சமின்றி ஒற்றை காலில் ஸ்டைலாக நிற்பார். அதில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை கமலாகவும், மற்ற பவுலர்களை ஃபகத் ஃபாசிலாகவும் மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் இது என்னோட கோட்டை தம்பி ரகம்.

ஒரு படத்தில் வெளிநாட்டு பெண் ஒருவரிடம் அரசியல்வாதி தமிழில் ஏதேதோ பேசிக் கொண்டிருப்பார். அதற்கு சூரி, "பேசி முடிச்சிட்டியா.. அந்த பொண்ணுக்கு தமிழே தெரியாது" என்று நக்கல் செய்வார். அதுபோல் நேற்றைய ஆட்டத்தில் ஜோ ரூட் விக்கெட்டை சிராஜ் வீழ்த்திய நிலையில், சுப்மன் கில் ஆக்ரோஷமாக கொண்டாடுவார். ஆனால் டிஆர்எஸ் முறையீட்டில், அது லெக் ஸ்டம்பை கடந்து வெளியில் சென்றுவிடும். இதனால் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. அந்த காமெடியில் வரும் அரசியல்வாதியாக சுப்மன் கில்லையும், சூரியாக ஜோ ரூட்டையும் மாற்றி, "கொண்டாடி முடிச்சிட்டியா.. அது மிஸ்ஸிங் லெக் ஸ்டம்ப்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஐயயோ இதை மறந்துட்டேனே மொமண்ட்.

யாரடி நீ மோகினி படத்தில் க்ரூப் டிஸ்கஷனின் போது தனுஷை பார்த்து நயன்தாரா, "யா..யா.. தவிர வேறு ஏதாவது சொல்லுங்க" என்று நேரடியாகவே சொல்வார். அதில் வரும் நயன்தாராவாக இந்திய அணியின் ரசிகர்களையும், தனுஷாக இந்திய அணியின் பவுலர்களையும் மாற்றி, ரன்கள் கொடுப்பதை தவிர வேற யாராவது விக்கெட் எடுங்கடா என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இவன் திருந்த மாட்டான்டி மொமண்ட்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சசிக்குமாரின் மகனாக வரும் சிறுவன், காவல் ஆய்வாளரான பக்ஸிடம், "ஹேப்பி ஓனம் அங்கிள்" என்று சொல்வார். அதில் குட்டிப் பையனாக பும்ராவையும், காவல் ஆய்வாளராக எதிரணி பேட்ஸ்மேன்களையும் மாற்றி, "விக்கெட் எடுக்க வந்திருக்கேன் அங்கிள்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள உள்ள சிக்கினது நீங்கதான் டா மொமண்ட்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications