"போஸ் கொடுத்தது போதும்.. வீட்டுக்கு போங்க தம்பி" அப்ரார் அஹ்மத்தை பொளக்கும் ரசிகர்களின் மீம்ஸ்!
துபாய்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததன் காரணமாக, கிட்டத்தட்ட அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி இழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி ரசிகர்கள் பாகிஸ்தான் அணியையும், அந்த அணியில் உள்ள வீரர்களின் ஆட்டிட்டியூடையும் ட்ரோல் செய்து மீம்ஸாக உருவாக்கி சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர். அதில் சிறந்த மீம்ஸை பார்க்கலாம்.
வைதேகி காத்திருந்தாள் படத்தில் கவுண்டமணியும் செந்திலும் கிரீஸ் டப்பாவை மட்டும் எடுத்து கொடு என்று கேட்கும் போது, அதை உதைத்து தள்ளிவிடுவார். அதற்கு மேலே வந்து கவுண்டமணி, "கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச" என்று செந்திலை மிதித்து கிணற்றில் தள்ளிவிடுவார். இதில் வரும் செந்திலை பாகிஸ்தான் அணியாகவும், விராட் கோலியை கவுண்டமணியாகவும் மாற்றி, "எப்படி ஒய்டு பந்தா போட்ட" என்று மிதித்து சதம் விளாசியதை வைத்து உருவாக்கிய மீம் நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா மொமெண்ட்.

கூலி திரைப்படத்தில் செந்தில் கவுண்டமணியிடம் அடி வாங்குவதை, "அந்த பரம்பரை அடி குடுக்குற பரம்பரை.. நம்ம பரம்பரை அடி வாங்குற பரம்பரை" என்று சொல்வார். இதில் வரும் இரு செந்திலில் ஒரு செந்தில் பாகிஸ்தான் அணியாகவும், இன்னொரு செந்தில் பாகிஸ்தான் அணியின் ரசிகர்களாகவும் மாற்றி, இந்திய அணி அடி குடுக்குற பரம்பரை.. பாகிஸ்தான் அடி வாங்குற பரம்பரை என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒரு வழியா உண்மையை ஒத்துக்கிட்டான்டா ரகம்.

பரிதாபங்கள் வீடியோ ஒன்றில், சுதாகர் ஒருவனை பார்த்து அடித்து கொண்டே இருப்பார். அதற்கு கோபி தடுத்து நிறுத்தி, "ஏன்டா அவனை எப்போ பார்த்தாலும் அடிச்சுட்டே இருக்க" என்று கேட்பார். அப்போது "இவனை பார்த்தாலே அடிக்க தோணுது" என்பார் சுதாகர். உடனே அவரின் முகத்தை பார்க்கும் கோபி சடாரென ஓங்கி அறைந்து, "ஆமா.. மாப்பிள்ள.. பாத்தோன அடிக்கணும்னு தோணுது" என்று சொல்வார். இதில் அடி வாங்குபவரை பாகிஸ்தான் அணியின் அப்ரார் அஹ்மத்தாக மாற்றி, கோபி, சுதாகரை இந்திய ரசிகர்களாக மாற்றி அடிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மனசாட்சியை அப்படியே சொல்லிட்டாங்க மொமண்ட்.

ஆதவன் படத்தில் வடிவேலு, "எனக்கு ஆத்திரம் அடங்கலைங்க.. அந்த ஜட்ஜை கொன்னு.." என்று வசனம் பேசுவார். இதில் வரும் வடிவேலுவை விராட் கோலி ரசிகர்களாக மாற்றி, "எனக்கு ஆத்திரம் அடங்கலைங்க.. வாங்க ஹர்திக் பாண்டியாவோட இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்று ஒரு ரெய்டு விட்டு வருவோம்" என்று பேசுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கொஞ்சம் பார்த்து அடிங்கடா ரகம்.

வார்த்தியார் படத்தில் பக்கவாதம் வந்த ஒருவர், வடிவேலுவை அடிக்கும் போது மட்டும் கையை அசைத்து வெளுப்பார். அப்போது வடிவேலு, "மற்ற நேரத்தில் எல்லாம் கை கால் பிரச்சனை செய்யுது.. நம்மளை அடிக்கும்போது மட்டும் சரியா இருக்கே" என்பார். இதில் வரும் வடிவேலுவை பாகிஸ்தான் அணியாகயும், அடிப்பவரை விராட் கோலியாகவும் மாற்றி, "மற்ற மேட்ச்-லாம் ஃபார்ம் அவுட்ல இருக்கான்.. நம்மளை அடிக்கிறதுனா மட்டும் ஃபார்முக்கு வந்துரானே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள வாடி என் மாமாக்குட்டி ரகம்.













Click it and Unblock the Notifications