"இனி எல்லா போட்டியும் இங்கேயே நடத்தலாமே!" நரேந்திர மோடி மைதானத்தின் Bad luck! தெறிக்கும் மீம்ஸ்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டி20 உலகக் கோப்பையில் நேற்று நடந்த சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் இந்தியா படுதோல்வி அடைந்தது. 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து இந்தியா அணியை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பறக்கிறது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.

நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இதில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 187 ரன்களை குவித்தது. இந்தியா மிக எளிதாக இந்த ரன்னை சேஸ் செய்துவிடும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், நடந்ததோ வேறு!

cricket India memes

இந்தியா தோல்வி

இந்தியா அணிக்குத் தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. டாப் ஆர்டரில் எந்தவொரு வீரரும் ரன்களை குவிக்க முடியவில்லை. ஷிவம் துபே மட்டும் தனியாகப் போராடினார். ஆனால் அவராலும் 42 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி 19.5 ஓவர்களில் 111 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதற்கிடையே இந்தப் போட்டி தொடர்பாக இணையத்தில் நெட்டிசன்கள் மீம்ஸகளை தெறிக்க விட்டு வருகிறார்கள். இந்தியாவின் தோல்வி நமது டீமில் இருக்கும் ஓட்டைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டதாக நெட்டிசன்கள் சாடி வருகிறார்கள். இந்திய டீமில் உள்ள பிரச்சினைகளை நக்கலாகவும் அவர்கள் மீம்ஸ் போட்டு சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

cricket India memes


மீம்ஸ்கள்

அதில் நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்யும் விஷயம் தான் அபிஷேக் ஷர்மாவின் பார்ம்.. அவர் கடந்த 4 போட்டிகளாக பெரிதாக ரன் அடிக்கவில்லை. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் கோல்டன் டக் ஆனார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4 பந்துகளில் டக், நெதர்லாந்து போட்டியில் மீண்டும் கோல்டன் டக் என்று இருந்த அவரது பார்ம் நேற்றும் அப்படியே தொடர்ந்தது. 12 பந்துகளில் 15 ரன்களை மட்டுமே அடித்தார்.

அட பரவாயில்லையே டக்கில் இருந்து முன்னேறி 15 ரன்னுக்கு வந்துட்டாரே என சொல்லி நெட்டிசன்கள் சாட்டை சமுத்திரக்கனியை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர். இது டிரெண்டிங்கில் போய் கொண்டு இருக்கிறது.

cricket India memes

எல்லா போட்டியும் இங்கேயே நடத்தலாமே

அடுத்து எழுந்த மிக முக்கியமான விமர்சனம் மோடி மைதானம் தொடர்பானது. ஐசிசி போட்டிகளில் 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பைக்குப் பிறகு தோல்வியையே சந்திக்காத அணியாக இருந்த இந்தியா நேற்று தோல்வியைச் சந்தித்தது. இந்த இரு தோல்விகளுமே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. இதைக் காட்டும் வகையில் இனி இதே மைதானத்தில் எல்லாப் போட்டிகளையும் நடத்தலாமா எனக் கேட்பது போல இருக்கிறது இந்த மீம்!

cricket India memes


விட்ற மாட்டேன்

முன்பு 2024ல் நடந்த உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்கா தான் மோதியது. அதில் இந்தியா அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தது. அதில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் தான் போட்டியை மாற்றியது. கடைசி ஓவரில் அவர் டேவிட் மில்லரை அவுட் ஆக்கியிருப்பார். அதை நினைத்தே டேவிட் மில்லர் நேற்று பொளந்து கட்டியதாகச் சொல்கிறது இந்த மீம். நேற்றைய போட்டியில் மில்லர் 35 பந்துகளில் 65 ரன்களை விளாசி ஆட்டை நாயகன் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

cricket India memes

ஐசிசி தொடர் முடியட்டும் பார்த்துக்கலாம்!

அமிஷேக் ஷர்மாவும் சரி, திலக் வர்மாவும் சரி வழக்கமான போட்டிகளில் மட்டுமே ரன்களை குவிப்பதாகவும் ஐசிசி தொடர்களில் அடிப்பதே இல்லை என்கிறது இந்த மீம்.! நேற்றிரவு முழுக்கவே சமூக வலைத்தளங்களில் இந்த போட்டி தொடர்பான மீம்ஸ்களே டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+