இந்த மீம்ஸ் எல்லாம் ஆர்சிபி வீரர்கள் பார்த்தால் நைட்டு தூங்கவே மாட்டாங்க.. வேற லெவலில் சம்பவம்
சென்னை: பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கனும்னு அவங்க கப் அடிக்குற வரைக்கும் 16 வருசமா நீங்க கப் அடிக்காம இருந்தீங்களா அருமை தம்பி.. என்று ஆர்சிபி ஆண்கள் அணியை கிண்டல் செய்து வேகமாக மீம்ஸ்கள் பரவி வருகின்றன. பெரும்பாலும் வீராட் கோலியை மையப்படுத்தியும் ஆர்சிபி அணியை மையப்படுதியும் மீம்ஸ்கள் வருகின்றன.

2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்றிரவு டெல்லியில் நடந்தது. இதில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.'டாஸ்' வென்ற டெல்லி கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து அவரும், ஷபாலி வர்மாவும் டெல்லியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். முதல் 6 ஓவர்களில் டெல்லி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்தது. இந்த சூழலில் 8-வது ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் சோபி மோலினெக்ஸ், ஷபாலி வர்மா (44 ரன், 27 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (0), அலிஸ் கேப்சியும் (0) என ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை காலி செய்தார்.

இதைத் தொடர்ந்து பெங்களூரின் சுழலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் டெல்லி கேப்டன் மெக் லானிங் (23 ரன்), மரிஜானே காப் (8 ரன்), ஜெஸ் ஜோனசென் (3 ரன்), மின்னு மணி (5 ரன்) அடுத்தடுத்த அவுட் ஆனார்கள்.. 64-0 என்று வலுவாக இருந்த டெல்லி அணி, கொஞ்ச நேரத்திலேயே 87-7 என்று மோசமாக மாறியது . இறுதியில் டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பெங்களூர் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரேயங்கா பட்டீல் 4 விக்கெட்டும், மோலினெக்ஸ் 3 விக்கெட்டும், ஆஷா சோபனா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

அடுத்து 114 ரன் இலக்கை நோக்கி பெங்களூர் அணி, இலக்கு குறைவு என்பதால் நிதானமாக விளையாடிது. சோபி டேவின் 32 ரன் எடுத்தார், மந்தனா 31 ரன்களே (39 பந்து, 3 பவுண்டரி) எடுத்தார். 3-வது விக்கெட்டுக்கு பெர்ரியுடன், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் இணைந்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தனர். கடைசி ஓவரில் ரிச்சா கோஷ் அட்டகாசமாக பவுண்டரி அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இதனால் பெங்களூர் அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. கோப்பையை வென்ற பெங்களூர் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த டெல்லிக்கு ரூ.3 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

இதனிடையே பெங்களூர் ஆர்சிபி மகளிர் அணி கோப்பையை வென்றுவிட்ட நிலையில், 16 வருடங்களாக கோப்பையை வெல்லாத ஆர்சிபி ஆண்கள் அணியை கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். "பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கனும்னு அவங்க கப் அடிக்குற வரைக்கும் 16 வருசமா நீங்க கப் அடிக்காம இருந்தீங்களா அருமை தம்பி" என்று மீம்ஸ் போட்டிருக்கிறார்கள்.
பங்காளி ஊரையே அடிச்சி உலையில வைப்பாரு,
— 𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 (@Durai_talks) March 18, 2024
தம்மாதுண்டு அடுப்புலயா உலை வெக்கமாட்டாரு.😂 pic.twitter.com/hqhRNeG2lQ
இன்னொரு மீம்ஸ் எப்படி என்றால், கட்டா குஸ்தி படத்தில் விஷ்ணு விஷாலை எப்படி எல்லாம் ட்ரோல் செய்வார்களோ..அப்படி எல்லாம் ஆர்சிபி அணியை விமர்சித்து ட்ரோல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்..இது இல்லாம பல மீம்ஸ்கள் ஆர்சிபி அணிக்கு எதிராக பரவி வருகின்றன. அவற்றை நீங்களே பாருங்கள்




-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications