எதுக்குடா டீ கப்பை உடைச்சனு கேட்டா.. புதுசா வரபோற கப்புல குடிக்கதான்னு சொல்றான் சார்!
சென்னை : ஐபிஎல் தொடரின் பைனல்சில் எந்தெந்த அணிகள் விளையாடப் போகிறதென தெரிந்தபின், நம் மீமர்கள் சும்மா இருப்பார்களா? அதுவும் ஆர்சிபி இந்த முறை பைனல்ஸுக்கு வந்துள்ள நிலையில், அது கப் அடிக்க வாய்ப்புள்ளதா என்பதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
கட்நத ஒரு மாதத்திற்கும் மேலாக கிரிக்கெட் ரசிகர்கள் கோலாகலமாக திருவிழா மாதிரி கொண்டாடி வந்த ஐபிஎல் போட்டிகள் நாளையுடன் முடிவடைய உள்ளன. இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த முறை ஆரம்பத்தில் இருந்தே ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடி வந்தது. அதனால் இந்தாண்டு அந்த அணி கப் அடிக்க அதிகம் வாய்ப்பிருப்பதாகப் பேசப்பட்டது.

ஆனால் இடையில் போர்ப்பதற்றம் ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஆர்சிபியின் ராசியால்தான் ஐபிஎல் நிறுத்தப் பட்டதாக அப்போதே அந்த அணியை வைத்து, கலாய்த்து தள்ளினார்கள் நம் மீமர்கள். இதனால் சோகத்தில் இருந்த ஆர்சிபி ரசிகர்களுக்கு, மீண்டும் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது மகிழ்ச்சி என்றால், தற்போது அந்த அணி பைனல்ஸ் வரை வந்திருப்பது அதைவிட இரட்டிப்பு மகிழ்ச்சி.
எப்படியும் இந்தமுறை கப் அடித்தே தீருவது என நாளைய ஆட்டத்தை எதிர்பார்த்து அந்த அணி ஒருபுறம் மகிழ்ச்சியில் இருக்க, 'அதெப்படி உங்களை அவ்வளவு ஈஸியாக விட்டு விடுவோமா?' என தங்கள் ஸ்டைலில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். 'இவ்ளோ நல்லா பெர்பார்ம் பண்ணி பைனல் வரை வந்து.. கடைசில அதுல தோத்துட்டா என்னடா பண்ணுவீங்க?' என அவர்கள் ஒருபுறம் வன்மத்தைக் கக்க, அவர்களுக்கு பதிலடி தரும் விதமாக, 'எதுக்குடா டீ கப்பை உடைச்சனு கேட்டா.. புதுசா வரபோற கப்புல குடிக்கதான்னு சொல்றான் சார்!' என தங்கள் பங்கிற்கு கலாய்த்து வருகின்றனர் ஆர்சிபி ரசிகர்களும்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications