ஆர்சிபி கப் ஜெயிக்கணும்னுதான் போரையே நிறுத்திட்டாங்க.. நீங்க நம்பலைனாலும் அதான் நிஜம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்க உள்ள நிலையில், நம் மீமர்களும் தங்களது வேலையை ஆரம்பித்து விட்டனர். இதனால் சமூகவலைதளப் பக்கங்களில் மீண்டும் ஆர்சிபி, சிஎஸ்கே என நகைச்சுவையாக மீம்ஸ்களில் வன்மத்தைக் கக்க ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது இருநாடுகளும் தாக்குதலை நிறுத்தி விட்ட நிலையில், மீண்டும் ஐபிஎல் போட்டிகளை தொடங்க முடிவு செய்து விட்டது பிசிசிஐ. அதன்படி, சில கட்டுப்பாடுகளுடன் நாளை மறுநாள் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்க உள்ளன.

IPL 2025 csk rcb srh Pbks gt dhoni vaibhav-suryavanshi memes 2025

ஐபிஎல் என்றாலே பெரும்பாலும் மீம்ஸ்களில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே பற்றிய மீம்ஸ்கள்தான் ஆக்கிரமித்திருக்கும். இந்தமுறையும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் சற்று வித்தியாசமாக நன்றாக விளையாடாத சிஎஸ்கேவை மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வந்தனர் நெட்டிசன்கள். ஏனென்றால், தொடர்ந்து நன்றாக விளையாடி வந்ததால் மீம்ஸ்களுக்கு கண்டெண்ட் கொடுக்காமல் தப்பி வந்தது ஆர்சிபி. ஆனால், ஐபிஎல் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டதால், மீண்டும் ஆர்சிபியைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.

சரி, இப்போதுதான் நிலைமை ஓரளவுக்கு சீராகி, மீண்டும் ஐபிஎல் ஆரம்பமாகப் போகிறதே.. இனியாவது ஆர்சிபியைக் கலாய்க்காமல் இருப்பார்கள் என நினைத்தால், அதெல்லாம் முடியாது என, 'எல்லாக் கோட்டையும் அழிங்க.. திரும்ப முதல்ல இருந்து கோடு போடுங்க' என சூரி காமெடியை வைத்து, ஆர்சிபியையும், சிஎஸ்கேவையும் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

"ஆர்சிபி கப் ஜெயிக்கணும்னுதான் போரையே நிறுத்திட்டாங்க.. நீங்க நம்பலைனாலும் அதான் நிஜம்!" என்றும், "திரும்பவும் ஐபிஎல் ஆரம்பமாகுதாம்.. நாமளும் வன்மம் மோட்-அ திரும்ப ஆன் பண்ணிட வேண்டியதுதான்!" என்றும் விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஐபிஎல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+