CSK Memes: மேலே ஏறி வாரோம், ஒதுங்கி நில்லு.. மும்பை இந்தியன்சை கலாய்க்கும் சிஎஸ்கேயன்ஸ்.. தெறிக்கும் மீம்ஸ்கள்
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியை சென்னை அணி வென்றது. சென்னை அணியின் அடுத்தடுத்த வெற்றிகளை கொண்டாடி வரும் அந்த அணியின் ரசிகர்கள் ஒஜி சிஎஸ்கே மீண்டும் வந்துவிட்டதாகவும், மேலே ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு.. 6 வது கப்பை எடுத்து வைங்க என்றும் இணையத்தில் ஜாலியாக மீம்ஸ் போட்டு டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. ஐபிஎல் தொடரின் புள்ளிகள் பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் உள்ள இரண்டு அணிகள் மோதின.

மீண்டும் பார்முக்கு வந்த சிஎஸ்கே
இரு அணிகளுமே வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய நிலையில் சென்னை அணி அசத்தல் வெற்றியை பெற்றது. 32 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்றது. துவக்க போட்டிகளில் தொடர்ந்து ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளாக அடுத்தடுத்து வெற்றி பெற்று பார்முக்கு திரும்பியிருப்பதால் சென்னை அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நேற்றைய வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளில் பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் 9 வது இடத்திலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 வது இடத்திலும் உள்ளன. புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம், அடுத்தடுத்த இரண்டு வெற்றிகள் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் தற்போது உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால், இணையத்தில் சிஎஸ்கேவுக்கு ஆதரவான மீம்ஸ்களையும் தெறிக்க விட்டு வருகிறார்கள்.
மீம்ஸ்களை தெறிக்க விடும் சிஎஸ்கேவினர்
ஐபிஎல் தொடரில் மும்பைக்கும் சென்னைக்கும் இடையே எப்போதும் கடும் போட்டி .அதிக கோப்பைகளை வென்ற பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இந்த அணிகளே இருந்தாலும், கடைசி இரண்டு தொடர்களாக இரு அணிகளும் சொதப்பி வருகின்றன. நடப்பு சீசனில் சொதப்பலோடு ஆரம்பித்தாலும் தற்போது சிஎஸ்கே பார்முக்கு வந்து இருப்பதால், மும்பை இந்தியன்ஸ் அணியை சீண்டி மீம்ஸ்களை சென்னை ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.
நாயகன் மீண்டும் வரார்..

தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றுவிட்டு அடுத்தடுத்து இரண்டு மேட்ச்களில் சிஎஸ்கே வெற்றி பெற்றதை, விக்ரம் படத்தில் கமல்ஹாசன் வரும் காட்சியோடு இணைத்து, ஓஜி சிஎஸ்கே இஸ் பேக் என பதிவிட்டு மீம்ஸ் போட்டுள்ளனர்.
9 வது இடத்தில் எப்படிதான் இருக்காங்களோ?

புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் இருந்து 8 வது இடத்துக்கு சிஎஸ்கே முன்னேறிய நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 9 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனை யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ் முதன் முதலாக பிளைட்டில் செல்லும் போது சொல்லும் டயலாக்கை மையப்படுத்தி, எப்படித்தான் 9வது இடத்தில் இருக்காங்களோ? என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
6-வது கப்பை எடுத்து வைங்கடா!

ஏற்கனவே சிஎஸ்கே 5 முறை கோப்பையை வென்ற நிலையில், இந்த போட்டியில் வென்ற நிலையில் 2026-லும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்பதை தெறி படத்தில் வரும் விஜய்யின் காட்சியை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர்.
தலையை வரசொல்லுங்க..

சென்னை அணியின் வெற்றியை ஒருபக்கம் கொண்டாடினாலும் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட்டின் மோசமான ஆட்டத்தையும் சில நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். நீங்க பேட்டிங்கும், கேப்டன்சியும் பண்ணது போதும், போய் பெஞ்ச்ல உக்காருங்க. தலையை வரசொல்லுங்க என்று சில்லுன்னு ஒரு காதல் சூர்யா -வடிவேலு காமெடி சீனை டெம்ப்ளேட்ட்டாக பொட்டு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
இது சும்மா டிரெய்லர் தான்

அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு தொடர் வெற்றியை பெற்றுள்ளதால் ஆர்சிபியை சீண்டும் வகையில் இது வெறும் டிரெய்லர் தான் இனி தான் எங்க ஆட்டம் இருக்கு என கிங் படத்தில் விக்ரமுக்கு பிரகாஷ் ராஜ் சவால் விடும் காட்சியினை மீம்ஸாக போட்டு ஆர்சியை விமர்சித்துள்ளனர்.
கேகேஆர் கூடவே எல்லா மேட்சும்..

கேகேஆரை சிஎஸ்கே எளிதில் வீழ்த்திய நிலையில், எல்லா மேட்சையும் அவங்க கூடவே வைப்போமா என்று ப்ரன்ஸ்ட் பட காமெடி சீனை வைத்து மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications