For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இணையத்தை கலக்கும் கபாலி மீம்ஸ்கள்...ஜெயிக்கப் போவது யாரு?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ரஜினி நடித்துள்ள கபாலி திரைப்படமானது இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ள சூழ்நிலையில் சமூக இணையதளவாசிகள் கபாலி படம் குறித்த மீம்ஸ்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்திவருகின்றனர்.

கபாலி' படத்தை இணைய தளத்தில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் வேளையில் அப்படத்தை இணைய தளத்தில் வெளியிட்டே தீருவோம் என, ஒரு கும்பல் களம் இறங்கியுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மட்டுமின்றி இன்னும் பல இணையதளங்கள் பல புதிய திரைப்படங்களை சட்ட விரோதமாக வெளியிட்டுவருகின்றன. கபாலி படத்தை இணையத்தில் வெளியிட கோர்ட் தடைவிதித்துள்ள நிலையில் சமூக வலைத்தளவாசிகள் ஃபேஸ் புக் மற்றும் டுவிட்டர் கபாலி திரைப்படத்தின் தயாரிப்பாளர் தாணு குறித்தும் தமிழ் ராக்கர்ஸ் குறித்தும் பல நகைச்சுவை மீம்ஸ்கள் விறுவிறுப்பாக பகிரப்பட்டு வருகின்றன.

சாமி தரிசனம்

இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்திலும் தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பாலும் உருவான திரைப்படம் கபாலி. உலகம் முழுவதுமுள்ள ரஜினி ரசிகர்களிடம் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது கபாலி.

கோர்ட் உத்தரவு

கோர்ட் உத்தரவு

இத்திரைபடத்தை யாரும் திருட்டுத்தனமாக இணையதளத்திலோ அல்லது திருட்டு வி.சி.டி. மூலமோ வெளியிட்டுவிடக் கூடாது என்பதற்காக தயாரிப்பாளர் தாணு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கபாலி திரைப்படத்தை வெளியிடும் இணையதளங்கள் முடக்கப்படும் என உத்தரவிட்டனர்.

உங்களுக்கு வந்தா ரத்தம்?

இந்த உத்தரவுக்கு பிற சினிமா தயாரிப்பாளர்களின் மனநிலையை மீம்ஸ் ஆக பதிவிட்டுள்ளார் ஒரு வலைத்தளவாசி.

என்னை யாராலும் அழிக்க முடியாது

நீதிமன்ற உத்தரவின் பேரில் Tamil Rockers என்னும் இணையதளமானது முடக்கப்பட்டது. ஆனால் அந்த இணையதளம் முடக்கப்பட்ட ஓரிரு நாட்களில் Tamil Rocker.be என்னும் இன்னொரு இணையதளத்தை உருவாக்கி அதனை டிவிட்டர் வலைதளத்திலும் பகிர்ந்திருந்தனர். இதனால் கபாலி படத்தின் தயாரிப்பு குழு மிகுந்த கவலை அடைந்துள்ளது. இதனை மீம்ஸ்களாக பதிவிட்டு வருகின்றனர் சமூகவலைத்தளவாசிகள்.

நீங்க நல்லா பண்றீங்க

தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம் மனதில் என்ன நினைக்கிறதோ இல்லையோ.... இந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் தயாரிப்பாளர் தாணுவை வச்சி செய்கிறார்கள்.

வெளியிட்டே தீருவோம்

'தமிழ் ராக்கர்ஸ்' உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான இணையதள பயன்பாட்டாளர்கள், 'கபாலி படத்தை இணையத்தில் வெளியிட்டே தீருவோம்' என, 'டுவிட்டரில்' கூறி வருகின்றனர். 'சும்மா இருந்தாலே படம் வெளிவர தாமதமாகி இருக்கும். படத் தயாரிப்பாளர் தாணுவால் எங்களுக்கு மேலும், 'புரமோஷன்' கிடைத்துள்ளது' என, 'தமிழ் ராக்கர்ஸ்' இணையதள பயன்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

வேறொரு பெயரில் இணையதளம்

இணையதளம் ஒன்றில், 30 நிமிடம் ஓடக்கூடிய,'கபாலி' படக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே அந்த இணைய தளம் முடக்கப்பட, உடனே வேறொரு பெயரில் இணையதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதுப்படக் காட்சிகளை இணையதளங்களில் வெளியிடும் கும்பல், சில தினங்களுக்கு முன்பு கபாலி படப்பிடிப்பு காட்சிகள், பாடல்கள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதற்குத்தான் இந்த மீம்ஸ்.

English summary
Kabali vs Tamilrockers memes and spreading it across Facebook and Whatsapp now. Here we got some Kabali Tamilrockers memes which will make you laugh for sure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X