என்ன பெரிய தக் லைஃப் திரிஷா.. உன்னை நினைத்து லைலா தெரியுமா? டிவில ஓடுது போய் பாரு!
சென்னை : தக் லைஃப் படம் ரிலீசாகி ஒரு வாரம் ஆகிவிட்ட போதும், இன்னமும் அந்தப் படத்தை மீம்ஸ் போட்டுக் கலாய்ப்பதை நிறுத்தவில்லை நம் நெட்டிசன்கள்.
சில படங்கள் ஒருமுறை அல்ல பலமுறை பார்த்தாலும், மீண்டும் மீண்டும் சலிக்காமல் பார்த்து ரசிக்கும்படி இருக்கும். ஆனால் ஒரு சில படங்களோ ஒருமுறை பார்த்து முடிப்பதற்குள்ளேயே, 'ஏன்தான் இந்தப் படத்திற்கு வந்தோமோ?' என சலிப்பை தந்து விடும். இதில் கமலின் தக் லைஃப் படம் இரண்டாவது வகை.

பெரும் எதிர்பார்ப்போடு தியேட்டருக்குச் சென்று விட்டு, ஏமாற்றத்தோடு திரும்பி வந்தவர்கள்தான் ஏராளம். அதனாலேயே படம் ரிலீசான நாளில் இருந்து, அந்தப் படத்தை மீம்ஸ் போட்டு விதவிதமாகக் கலாய்த்து வருகின்றனர். கதைக்களத்தை வைத்து, திரைக்கதையை வைத்து என ஒவ்வொரு பிரிவாக கலாய்த்து வரும் மீமர்களுக்கு, படத்தில் பிடித்த ஒரு விசயம் என்றால் அது திரிஷாதான் போல. அதனால்தான், திரிஷாவின் கதாபாத்திரத்தை வைத்தும் தனியாக ஒரு கலெக்ஷனே போடும் அளவிற்குக் கலாய்த்துள்ளனர்.
"என்ன பெரிய தக் லைஃப் திரிஷா.. உன்னை நினைத்து லைலா தெரியுமா? டிவில ஓடுது போய் பாரு!" என்றும், "என்ன தக் லைஃப் பதிவுங்க கம்மி ஆகிடுச்சு.. ஒருவேளை எல்லோரும் திரிஷா ரசிகர்கனுங்களா மாறிட்டாங்களா!" என்றும் விதவிதமாகக் கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில, 'தக் லைஃப்' ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications