வேலைக்காக பஸ்ல போன காலம் போயி.. இப்ப பஸ்ல போறதுக்காகவே வேலைக்கு போகனும் போல.. கலக்கல் மீம்ஸ்!
பஸ் கட்டண உயர்வை நக்கலடித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
Recommended Video

சென்னை: பஸ் கட்டண உயர்வை நக்கலடித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
தமிழக அரசு அண்மையில் பேருந்து கட்டணத்தை பாதிக்கும் மேலாக உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்களும் வலைய வருகின்றன. அவற்றில் சில..
|
நம்ம ஆன்மீக அரசியல்வாதி?
பஸ் கட்டண உயர்வு எங்கே போனாரு நம்ம ஆன்மீக அரசியல்வாதி? பஸ் கட்டண உயர்வு குறித்து ரஜினி பேசினாரா? அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது என்று மக்கள் நினைக்கிறார்கள்.. என்கிறார் இந்த நெட்டிசன்
|
பஸ்ல போறதுக்காக..
வேலைக்காக பஸ்ல போன காலம் போயி.. இப்ப பஸ்ல போறதுக்காகவே வேலைக்கு போகனும் போல.. எங்கிறது இந்த மீம்..
|
இதுஉங்கள் சொத்து
இது உங்கள் சொத்து.. இப்படிதான் டிக்கெட் கட்டணம் பஸ்க்குள் விவாதிக்கப்பட்டது என்கிறார் இந்த நெட்டிசன்..
|
நான் நடந்தே போய்க்கிறேன்..
போங்கடா.. இனிமே நான் நடந்தே போய்க்கிறேன்.. தோல்வியடைந்த அதிகாரிகள் = தோல்வியடைந்த அரசு.. மக்கள்தான் கடந்து செல்லவேண்டும் என்கிறார்
|
அதான் நானும் கேக்குறேன்
பயணி: மீதி காச கொடுங்க..
கண்டக்டர்: அதான் நானும் கேக்குறேன் மீதி காச கொடுங்க..
|
குழிய தோண்டி போட்றாதீங்கடா
பைக்ல போய்க்கிட்டு இருந்தேன் பெட்ரோல் விலையை ஏத்தினிங்க.. சரி பஸ்ல போலாம்னு பார்த்தா டிக்கெட் விலையை ஏத்திட்டானுங்க.. நடந்து போலானு இருக்கோம் ஏதும் குழிய தோண்டி போட்றாதீங்கடா.. என்கிறது இந்த மீம்..












Click it and Unblock the Notifications