For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்க மாபியா அரசாங்கம் நடத்துறதே அராஜகம் பண்ணத்தான்..!!!

பெண்கள் மீது தாக்குதல் நடத்திய திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜனை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Google Oneindia Tamil News

திருப்பூர்: மதுக்கடைக்கு எதிராக திருப்பூர் சாமளாபுரத்தில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து இணையதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. பெண்களை கண்மூடித்தனமாக தாக்கிய ஏடிஎஸ்பி பாண்யராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்களை ஏடிஎஸ்பி பாண்டியராஜன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று தடியடி நடத்தி கலைத்தனர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் பெண்களை ஓட ஓட விரட்டியடித்தும், ஓங்கி அறைந்தும் தாக்குதல் நடத்திய ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணிநீக்கம் செய்யக்கோரி இன்று அப்பகுதி மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில் பாண்டியராஜனை கண்டித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில இதோ..

அதனாலதான் அடிச்சு விரட்டுனோம்..

சும்மா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க தம்பி.. இந்த இடத்துல ஒயின்ஷாப் வந்தாதான் குடிச்சுட்டு பைக்ல வரவன்கிட்ட காசு புடுங்க முடியும்.. இங்க ஒயின்ஷாப் வரலனா எங்கள மாதிரி போலீஸ் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அதனாலதான் அடிச்சு விரட்டுனோம்.. எதையும் தொலைநோக்கு பார்வையோட பாருங்க..

அப்போ தெரியும் அதோட வலி.

நாளைக்கு உன் பையனும் அந்த ஒயின் ஷாப்ல குடிச்சிட்டு வருவான் அப்போ தெரியும் அதோட வலி... என்கிறது இந்த மீம்..

அராஜகம் பண்ணத்தான்..

அதெல்லாம் செய்ய முடியாது நாங்க மாபியா அரசாங்கம் நடத்துறதே அராஜகம் பண்ணத்தான்! என்கிறது இந்த மீம்..

போராட்டம் பண்ணியே ஆக வேண்டும்

இப்போ இதுக்கு நீங்க போராட்டம் பண்ணியே ஆக வேண்டும்.. என மாதர் சங்கங்களை வலியுறுத்துகிறது இந்த மீம்...

நல்லா தெரியாது ஆமா..

இதுக்கு போராடாம நாங்க மகளிர் சங்கம்.. மண்ணாங்கட்டி சங்கம் சிம்பு பாடுனார்.. சொம்பு பாடுனார்னு யாராவது வந்தீங்க நல்லா தெரியாது ஆமா...

English summary
So many memes roaming on internet about ADSP Pandiyarajan who were beating womens in tirupur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X