மாசம் பொறந்தா மாப்பிள்ளைக்கு என்ன வரும்னு கேட்டா.. பென்சன் வரும்னு சொல்றாங்க சார்!
சென்னை : வைகாசி மாத தொடர் முகூர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இன்னமும் அந்த பாதிப்பில் இருந்து வெளிவரவில்லை போலும்.. அதனால்தான் இன்னமும் மீம்ஸ்களில் முகூர்த்தம், திருமணம், மொய், கல்யாணச் சாப்பாடு என திருமணக் களை கொட்டிக் கிடக்கிறது.
கடந்த வாரம் சொல்லி வைத்தார்போல், 5ம் தேதியில் ஆரம்பித்து, 9ம் தேதி வரை முகூர்த்த நாட்கள் வரிசை கட்டி விட்டன. எந்தப் பக்கம் திரும்பினாலும் திருமணம், நிச்சயதார்த்தம், காதுகுத்து, வளைகாப்பு என மண்டபங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தன. விசேஷம் நடத்துபவர்களுக்கு மட்டும்தான் கொண்டாட்டம்.. ஆனால் ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட விசேஷங்களுக்கு மொய் எழுதுபவர்களுக்கோ திண்டாட்டமோ திண்டாட்டம்தான்.

அதிலும் மொய் மட்டும் எழுதிவிட்டு, ஒரு விசேஷத்திலும் வயிறார சாப்பிட முடியாத கொடுமைகளை எல்லாம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அதனால்தான், 'ஒரே நாள்ல எத்தனை கல்யாணம்.. எல்லா கல்யாணத்துலயும் சாப்ட வயித்துல இடமும் இல்ல.. மொய் வைக்க பாக்கெட்ல பணமும் இல்லை' என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
இப்படி குடும்பஸ்தர்கள் ஒருபுறம் புலம்பிக் கொண்டிருக்க, இன்னமும் திருமணம் ஆகாதவர்களோ, "உன்னை கல்யாணம் பண்ணுனு சொல்றவன்லாம் யாருனு நினைச்ச.. ஒய்ப்கிட்ட அடி வாங்கிட்டு இருக்க பயலுகதான்!" என்றும், "மாசம் பொறந்தா மாப்பிள்ளைக்கு என்ன வரும்னு கேட்டா.. பென்சன் வரும்னு சொல்லுங்க சார்!" என்றும் தங்கள் பங்கிற்கு வேறு மோடில் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications