அரிசி பிரியாணியாவதும்..பழைய சோறாக மாறுவதும் மனைவி கையில்தான் இருக்கு..கல்யாண மீம்ஸ்
திருமண வாழ்க்கையில் சந்திக்கும் சில சம்பவங்களை மீம்ஸ்களாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
சென்னை: குடும்ப வாழ்க்கையில் தினம் தினம் நாம் சில சம்பவங்களை பார்த்திருப்போம். கணவன் மனைவி இடையேயான பேச்சுக்கள் சில நேரங்களில் சிரிப்பை வரவழைக்கும். சில வீடுகளில் பேச்சுக்களே கலகலப்பாக இருக்கும். சில பேச்சுக்கள் நக்கல் நையாண்டியாக இருக்கும். தினசரி குடும்பத்தில் பேசும் பேச்சுக்கள், சமையல், சந்தோஷ சம்பவங்களை மீம்ஸ்களாக பார்க்கும் போது அதுவும் அதற்கு சரியான டெம்ப்ளேட் போட்டு பதிவிடும் போது குபீர் சிரிப்புகளை வரவழைக்கும். ரசிங்க..சிரிங்க.. இந்த மீம்ஸ்களை உருவாக்கியவர்களுக்கு நன்றிகள் பல.
பெண்களிடம் காதலை சொன்னால் அடி விழும் அது காதலை ஏற்றுக்கொள்ளாவிட்டால் வேறு மாதிரியாக இருக்கும். அந்த காதல் கல்யாணத்தில் முடிந்தால் சமையல் அறையில் இருந்து பாத்திரம் பறக்கும் மொத்தத்தில் அடி கன்பார்ம்.

கல்யாணமான உடனேயே சிலருக்கு நட்புகளுக்கு இடையே பிரிவு ஏற்பட்டு விடும். அப்படி திருமணமானவர்கள் சோகத்துடன் பதிவிட்டதுதான் இந்த மீம்ஸ்.
கணவன் மனைவி இடையே சாப்பிடும் போது சில நேரங்களில் ஆசையோடு பேசிக்கொள்வார்கள். அப்போது உங்க கிட்ட பேசணும் என்று சொல்லும் மனைவியைப் பார்த்து கணவர்களுக்கு பீதியாகி விடும்.
சிலர் பேசிக்கொண்டே இருப்பார்கள். பல மனைவிகள் பேசி பேசிய ஏன் திட்டி திட்டியே பாதி பேர் உயிரை எடுத்து விடுவார்கள். அந்த விரதம் இந்த விரதம் என இருப்பதற்கு மவுன விரதம் இருங்களேன் என்று சொல்லியிருக்கிறார் ஒரு மீம்ஸ் கிரியேட்டர்.
அரிசி என்னவோ வீட்டில் இருப்பதுதான், அது பிரியாணியாவதும், பழைய சோறாக தட்டில் வருவதும் மனைவியின் மனதைப் பொருத்தது என்கிறார் ஒரு அனுபவஸ்தர்.
சமைக்கிறவனுக்குத்தானே தெரியும் சங்கடம்..என்ன பொருள் வாங்கணும் வாங்கக் கூடாது என்று சூப்பர் மார்க்கெட்டில் ஒவ்வொரு பொருளையும் கேட்டு கேட்டு வாங்கும் போதே தெரிந்து கொள்ள வேண்டாமா?
பொதுவாக டிவி பார்க்கும் போதுதான் சண்டை ஆரம்பிக்கும். என்ன சேனல்பார்ப்பது என்பதில் ஆரம்பித்து பரம்பரையையே வம்புக்கு இழுப்பார்கள். நீ என்ன போடுறயோ அதை பாத்துக்கிறேன் என்கிறார் இந்த மீம்ஸ் பதிவர்.
பேசாமல் வாயை வைத்துக்கொண்டு இருந்திருக்கலாம். மனைவியை பாராட்டுகிறேன் என்கிற பேரில் சொந்த வாயில் சூனியம் வைத்துக்கொண்டார் இந்த கணவன்.



















Click it and Unblock the Notifications