"துப்பாக்கி வேலை செய்யல பார்த்திபன்". செமி பைனலில் இந்தியாவிற்கு ஆபத்து.. இந்த மீமை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அணி செமி பைனலுக்குள் சென்றுள்ள நிலையில் அணிக்கு காத்திருக்கும் ஆபத்து தொடர்பாக மீம் ஒன்று டிரெண்டாகி வருகிறது.

2023 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியை செமி பைனலில் எதிர்கொள்ள உள்ளது. கிட்டத்தட்ட இந்த உலகக் கோப்பை 2019 உலகக் கோப்பை போல இந்த செமி பைனல் மாறிவிடும். செமி பைனலில் நாம் நியூஸிலாந்திடம் ஏற்கனவே தோல்வி அடைந்துவிட்டோம்.

 Massive meme on Team Indias prospects against New Zealand in Semi-Finals in the 2023 World Cup Cricket?

செமி பைனல்: இந்த முறை செமி பைனலுக்கு 9 தொடர் வெற்றிகளோடு இந்தியா சென்றுள்ளது. ஏற்கனவே நியூசிலாந்தை ஒருமுறை இந்தியா இந்த தொடரில் வீழ்த்தியும் விட்டது. இந்திய அணி எப்போதுமே லீக் ஆட்டங்களில் நன்றாக ஆடி உள்ளது. ஆனால் செமி, பைனல் போன்ற நாக் அவுட் போட்டிகளில் தோனிக்கு பின்பாக எந்த கேப்டனும் சரியாக ஆடவில்லை. அந்த அழுத்தம் இப்போதும் இந்திய அணிக்கு இருக்கும். அதை சரி செய்ய இந்திய அணி கஷ்டப்பட வேண்டும். இதுவே பெரிய அழுத்தத்தை இந்திய வீரர்களுக்கு கொடுக்கும்.

அதேபோல் இந்தியா வெற்றி மிதப்பில் இருக்க கூடாது. வரிசையாக இந்தியா வென்றுவிட்டது. 9க்கு 9 போட்டிகளில் வென்றுவிட்டது. இந்திய அணியின் தொடர் வெற்றிகள் முக்கியமான ஆபத்து ஆகும். இதே மனநிலையோடு போனால் திடீர் தோல்விக்கு அது காரணம் ஆகும்.

இந்திய அணி எப்படி?: ஏனென்றால் இந்திய வீரர்கள் என்று இல்லை தொடர் வெற்றிக்கு யாருக்குமே மிதப்பை கொடுக்கும். அந்த மிதப்பு காரணமாக வீரர்கள் சொதப்ப வாய்ப்பு உள்ளது. இந்த மனநிலையை ரோஹித் தான் மாற்ற வேண்டும். ஒரு தோல்வியாவது இருந்திருந்தால் பயம் வந்திருக்கும். ஆனால் அந்த பயம் இப்போது அணியில் இல்லை.

ஓப்பனிங்கில் இன்னும் ரோஹித், கில் கொஞ்சம் பொறுமையாக ஆட வேண்டும். இனி நடக்கும் இக்கட்டான போட்டிகளில் கில் முழு பார்மிற்கு திரும்பியே ஆக வேண்டும். முக்கியமான நேரத்தில் இது போன்ற வீரர்களின் பார்ம்தான் மிக முக்கியம். இல்லையென்றால் ஓப்பனிங் இறங்க வேறு வீரரை ரோஹித் பிடிக்க வேண்டும்.

ஒன்சைட் வெற்றி: வரிசையாக இந்திய அணி 9 போட்டிகளில் வென்றுள்ளது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் கொஞ்சம் திணறியபடி ஆடி வென்றது.. ஆனால் அதற்கடுத்த ஆட்டங்களில் இந்தியா தொடர்ச்சியாக எதிரணிக்கு எந்த விதமான வாய்ப்பும் கொடுக்காமல்.. கொஞ்சம் கூட பிரஷர் இல்லாமல் வென்றது.

போரிங் மேட்ச் என்று சொல்லும் அளவிற்கு எல்லாமே ஒன்சைட் வெற்றியாக அமைந்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை இந்தியாதான் 9 போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தியது.

மீம் டிரெண்டிங்: இந்த நிலையில்தான் இந்திய அணி செமி பைனலுக்குள் சென்றுள்ள நிலையில் அணிக்கு காத்திருக்கும் ஆபத்து தொடர்பாக மீம் ஒன்று டிரெண்டாகி வருகிறது.

அதன்படி இந்திய அணி லீக் போட்டிகளில் எல்லாம் நன்றாக ஆடும் . ஆனால் செமி பைனல் என்றால் சொதப்பி விடும் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இப்போது 3 அரைசதம், 2 சதம் அடித்த பேட்டிங் லைன் அப்.. வரும் வியாழக்கிழமை செமி பைனலில் கண்டிப்பாக.. "துப்பாக்கி வேலை செய்யல பார்த்திபன்" என்பது போல வந்து நிற்கும் என்று மீம் போட்டு விமர்சனம் வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+