நிர்வாண சாமியாருக்கு பாதுகாப்பு கொடுக்க சொன்னவங்கதான் நிர்வாணமா போராடுன விவசாயிகளை கைது செய்தாங்க!
டெல்லியில் நேற்று தமிழக விவசாயிகள் நிர்வாணமாக போராடியும் பிரதமர் மோடி அவர்களை கண்டுகொள்ளாததை கண்டித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
டெல்லி: டெல்லியில் நேற்று தமிழக விவசாயிகள் நிர்வாணமாக போராடியும் பிரதமர் மோடி அவர்களை கண்டுகொள்ளாததை கண்டித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. டெல்லியில் நேற்று 28வது நாளாக போராட்டம் நடத்திய விவசாயிகளை பிரதமர் மோடியை சந்திக்க வைப்பதாக அழைத்து சென்ற அம்மாநில போலீசார் அதிகாரிகளிடம் மனுவை அளிக்கச் செய்தனர்.
இதனால் ஏமாற்றமடைந்த தமிழக விவசாயிகள் பிரதமர் அலுவலகம் எதிரிலேயே நிர்வாணமாக சாலையில் உருண்டனர். விவசாயிகளின் இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், இதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் பிரதமர் மோடியை கண்டித்தும் சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில..
சாமியாருக்கு பாதுகாப்பு..
அன்னைக்கு நிர்வாணமா சுத்துன சாமியாருக்கு பாதுகாப்பு கொடுக்க சொன்ன பயலுவதேன்... என நிர்வாணமாக போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டுகிறது இந்த மீம்..
புதிய இந்தியா
பத்து லட்சம் ரூபாயில் ஆடை அணியும் பிரதமரும்... அவரை பார்க்க நிர்வாணமாய் விவசாயிகள் போராடுவதும் தான் புதிய இந்தியா... என்கிறது இந்த மீம்..
மோடி அரசின் செயல்பாடற்ற...
அப்போ டெல்லியில விவசாயிங்க நிர்வாணமா போராடுறது மோடி அரசின் செயல்பாடற்ற நிலைமை தெரியுமா ?? என கேட்கிறது இந்த மீம்...
மதிக்கப்படவில்லை விவசாயிகளே..
கழுத்தில் ருத்திராட்ச மாலையோ... தலையில் ஜடா முடியோ.. உடம்பு முழுவதும் திருநீரோ இல்லை!! அதனால் உங்களது நிர்வாண போராட்டம் இந்தியாவில் மதிக்கப்படவில்லை விவசாயிகளே...
வலி புரிய வாய்ப்பு இல்லை...
10 லட்சம் ரூபாய்க்கு கோட் போடுரவருக்கு எல்லாம் நிர்வாண போராட்டத்தின் வலி புரிய வாய்ப்பு இல்லை... என்கிறது இந்த மீம்...
நாங்க பார்ப்போம் சார்...
சொந்த நாட்டு விவசாயியையே நிர்வாணமா போராட வச்சு யாராவது வேடிக்கை பார்ப்பாங்களா? நாங்க பார்ப்போம் சார்...
கண்டுகொள்ள யாரும் இல்லை!
எத்தனையோ மீடியா மக்கள் உள்ள இந்த நாட்டில் ஒரு விவசாயி வறுமையால் தற்கொலை செய்தால் கண்டுகொள்ள யாரும் இல்லை! என்கிறது இந்த மீம்...
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications