இன்னைக்கு புரட்டாசி வெள்ளிக்கிழமை.. ஆனா இப்டி வாழ்த்தா சொல்லி வெறுப்பேத்துறீங்களே மக்கா!
முட்டை தினம் பற்றிய சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்று, 'உலக முட்டை தினம்,' 1996 முதல் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமை, உலக முட்டை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முட்டையின் நன்மைகள் குறித்தும், அதிலுள்ள சத்துகள் மற்றும் அதன் முக்கியத்துவங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதுதான் இந்த நாளின் நோக்கம்.
வழக்கம் போலவே முட்டை தினத்தையும் விதவிதமாக மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகிறார்கள் நெட்டிசன்கள். புரட்டாசி மாதம், வெள்ளிக்கிழமை என்பதால் பல வீடுகளில் இன்று முட்டை என்ற பெயரை உச்சரிக்கக்கூட மாட்டார்கள்.
அதனாலேயே தங்களது ஆதங்கத்தை எல்லாம் மீம்ஸ்களாக வெளியிட்டு தங்களைத் தாங்களே சாந்தப்படுத்திக் கொண்டுள்ளனர் பலர். அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி முட்டைகள்.. சாரி மீம்ஸ்கள் உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications