ஓ மை காட்.. செல்லூர் ராஜு +2 பயங்கரமா பாஸ் பண்ணிருக்காரே.. ஓட்டும் நெட்டிசன்கள்!
தெர்மாகோல் புகழ் அமைச்சர் செல்லூர் ராஜூவை ப்ளஸ்டூ ரிசல்ட்டுடன் ஒப்பிட்டு ஓட்டியுள்ளனர் நெட்டிசன்கள்.
சென்னை: நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோல் திட்டத்தை செயல்படுத்தி ஒவர் நைட்டில் உலகம் முழுக்க பிரபலமானவர் அமைச்சர் செல்லூர் ராஜூ. அவரது தெர்மாகோல் திட்டத்தை சீனப்பத்திரிக்கையும் மெச்சி செய்தி வெளியிட்டது.
அமைச்சரின் தெர்மாகோல் திட்டத்தை அடிக்கும் வெயிலுக்கு இதமாக சமுகவலைதளங்களில் மரண கலாய் கலாய்த்தனர் நெட்டிசன்கள். திட்டம் புஸ்ஸானதால் நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னமானார் அமைச்சர்.

இந்நிலையில் ஒருமாதம் ஆன பிறகும் அவரை விடாமல் துரத்தி வருகின்றனர் வலைஞர்கள். தற்போது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில் அமைச்சரின் அறிவியல் அறிவை கலாய்த்து மீம் வெளியிட்டுள்ளனர்.
அதாவது அமைச்சர் செல்லூர் ராஜூவின் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
மொழிப்பாடத்தில் - 201 மதிப்பெண்கள், ஆங்கிலம்- 200 மதிப்பெண்கள் இயற்பியல் - தியரியில் 151 மதிப்பெண்கள், பிராக்டிகளில் 50 எனமொத்தம் 201மதிப்பெண்கள் என்றும், வேதியியலில் 250 மதிப்பெண்கள், உயிரியலில் 164மதிப்பெண்களும் கணிதத்தில் 209 மதிப்பெண்களும் என 1200க்கு 1225 மதிப்பெண்கள் என போட்டு கலாய்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications