பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என்று ரசிகர்களிடம் கேட்டிருக்கிறார். அதேபோல் முதல்வர் விஜய் கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்கு சென்று 1.6 கிலோ எடையிலான வெள்ளி வாளை காணிக்கையாக கொடுத்துள்ளார். இதனை வைத்து சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
நான் அரசியலுக்கு வரணுமா, வேண்டாமா என்பதை மக்களிடம் கேட்டுள்ள ராகவா லாரன்ஸ்க்கு ஒரு நபர் கமெண்ட் செய்துள்ளார். அதில், நீங்கள் நிச்சயமாக திமுகவுக்கு எதிரா அரசியலுக்கு வரணும் மாஸ்டர்.. நீங்க வந்தாதான் சன் டிவிக்காரன் மொட்டை சிவா கெட்ட சிவா , காஞ்சனா 3, சந்திரமுகி 2 எல்லாத்தையும் திரும்ப திரும்ப போட்டு எங்கள் உயிரை வாங்க மாட்டான் என்று பதிவிட்டுள்ள சம்பவம் உசுரு முக்கியம்டா ரகம்.

அமைதிப் படை படத்தில் மணிவண்ணன் சத்யராஜை வேலைக்கு சேர்ப்பதற்கு முன் சில விஷயங்களை கேட்பார். அப்படி சத்யராஜை முதல்வர் விஜய்யாகவும், மணிவண்ணனை திமுகவாகவும் மாற்றி, மேகதாது வச்சு மிரட்டி பார்த்தவங்களை திருப்பி மிரட்ட கர்நாடகா சிஎம்மை பார்க்க போனீங்களா? என்று கேட்பதாகவும், அதற்கு விஜய், ஐயோ.. அதுக்கெல்லாம் இல்லீங்க.. ஜோசியக்காரன் பரிகாரம் பண்ண சொல்லி மூகாம்பிகை கோயிலுக்கு போயிட்டு வந்தங்கணா என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அடங் கொய்யால ரகம்.

காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என்று தொடர்ச்சியாக பேய் படங்களை இயக்கி முக்கிய நடிகராக உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். அவர் விஜய்யுடன் அரசியலில் இணைய தயாராகி வரும் சூழலில், அவரை ஆவிகள் மற்றும் பேய் பிசாசு நலத்துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆத்தி.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே ரகம்.

படிக்காதவன் படத்தில் விவேக், "அப்பனே முருகா.. என்னை மட்டும் எப்படியாவது காப்பாத்திருயா.. நான் மட்டும் தமிழ்நாட்டுக்கு வந்துட்டா அலகு குத்திட்டு கோயிலுக்கு வரான்யா" என்று கண்ணாடியை பார்த்து பேசுவார். அதில் வரும் விவேக்கை முதல்வர் விஜய்யாக மாற்றி, ஆத்தா மூகாம்பிகையே எப்பேர்ப்பட்ட கூட்டத்துக்கு நடுவுல என்னை மாட்டிவிட்டுருக்க.. எந்த சேதாரமும் இல்லாம என்னை இப்படியே வீடு போய் கொண்டு சேர்த்திட்டேனா அடுத்த தடவை இங்கே வரும் போது உனக்கு தங்கத்திலேயே வாள் செஞ்சு வைக்கிறேன் ஆத்தா என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் என்னை மட்டும் எப்படியாவது காப்பாத்திடுறா ரகம்.













Click it and Unblock the Notifications