அடிக்குதே அதுவா கடப்பார டீம்.. இல்ல அடி வாங்குதே.. அதுதான் கடப்பார டீம்! மும்பையை வெளுக்கும் மீம்ஸ்
மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக சிஎஸ்கே அணி ஏராளமான சாதனைகளை படைத்துள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மீம்ஸை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். அதில் சிலவற்றை பார்க்கலாம்.
படிக்காதவன் படத்தில் தனுஷ், அடி குடுக்குறாரே.. அவராடா அசால்ட் ஆறுமுகம்? என்று கேள்வி கேட்பார். அதற்கு அவரின் நண்பர், இல்ல.. அடி வாங்குறாரே.. அவர்தான் அசால்ட் ஆறுமுகம் என்பார். அதில் அடி கொடுக்கும் மீசை ராஜேந்திரனாக சிஎஸ்கே அணியையும், விவேக்கை மும்பை அணியாகவும் மாற்றியுள்ளனர். அப்போது தனுஷ், அடி குடுக்குறாரே. அவராடா கடப்பாரை? என்று கேள்வி கேட்க, அதற்கு, இல்லை.. அடி வாங்குறாரே. அவர்தான் கடப்பாரை என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இது ஏதோ காமெடி பீஸ் ரகம்.

வீர தீர சூரன் படத்தில் விக்ரமிடன் வில்லன் ஒருவர், "என் மாப்பிள்ளையை போட்டால் நான் வருவேனு தெரியும்லடா" என்பார். அதற்கு விக்ரம் உடனடியாக ஒரு துப்பாக்கியை அசம்பிள் செய்து, "உன் மாப்பிள்ளையை போட்டால் நீ வருவ.. உன்னை போட்டால் எவன்டா வருவான்" என்று கொலை செய்வார். அதில் வரும் வில்லனாக மும்பை அணியை மாற்றி, "ரெண்டு டீமை போட்டா அடுத்து நான் வருவேனு தெரியும்லடா" என்று கேட்பதாகவும், அதற்கு விக்ரமை சிஎஸ்கே அணியாக மாற்றி, உன்னை போட்டா எவன்டா வருவான் என்று கொல்வது போலவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ் ரகம்.

உனக்காக எல்லாம் உனக்காக படத்தில் கல்யாணத்திற்கு சென்று கவுண்டமணி சிக்கி கொள்வார். அப்போது அங்கிருக்கும் கார்த்திக் சிரித்துக் கொண்டே ஓடிவிடுவார். அதற்கு கவுண்டமணி, "ஏய்.. என்ன மாப்பிள்ளை சிரிக்கிற.. உன்கிட்ட இருக்க கெட்டப் பழக்கமே இதுதான்" என்பார். அதில் வரும் கவுண்டமணியாக மும்பை அணியையும், கார்த்திக்காக ஹர்திக் பாண்டியாவையும் மாற்றி, ஏய்.. AURA.. என்னடா சிரிக்கிற என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆள விடுங்கடா கொய்யால ரகம்.

கோவை பிரதர்ஸ் படத்தில் வடிவேலுவிடம் அல்வா சீனு, "பாஸ் இந்த பேட்டை வைத்து நான் செய்யப் போற விஷயத்தை பார்த்து நீங்க ஆடிப் போயிருவீங்க.. அசந்து போய்ருவீங்க" என்பார். அதில் வரும் வடிவேலுவாக ஹர்திக் பாண்டியாவையும், திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவாக அல்வா சீனுவாகவும் மாற்றி, "இப்போ பாருங்க கேப்டன்.. எப்படி டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடி அடி கொடுக்கிறோம்னு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் என்னடா பண்றீங்க ரகம்.

படிக்காதவன் படத்தில் பெத்தாபுரம் பெத்தன்னா என்ற ரவுடியை விவேக் ஒரே அடியில் வீழ்த்திவிடுவார். அதற்கு முன் விவேக் அருகில் நிற்கும் இருவரும், அவர் அடி வாங்கப் போகிறார் என்று உணர்ந்து கண்ணை மூடிக் கொள்வார்கள். இதில் வரும் விவேக்காக ருதுராஜ் கெய்க்வாட்டையும், அந்த இருவராக நூர் அஹ்மத் மற்றும் அகீல் ஹொசைனாகவும் மாற்றி உருவாக்கப்ப்ட்டுள்ள மீம் அந்த சீன்லாம் இங்க கிடையாது ரகம்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications