"எங்க சின்ன தல சுரேஷ் ரெய்னா மாதிரியே இருக்கு" வெற்றிக்கு பின் சிஎஸ்கே ரசிகர்களின் வெறித்தன மீம்ஸ்!
சென்னை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பெற்றுள்ள முதல்வெற்றி என்பதால், கூடுதல் உற்சாகம் அடைந்துள்ள சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் தரமான மீம்ஸை பார்க்கலாம்.
மெர்சல் படத்தில் "உன்னையும், வெற்றியையும் பார்க்கும் போது, எங்க அண்ணன் வெற்றி மாறனை பார்க்கிறது போலவே இருக்கு" வடிவேலு ஒரு வசனம் பேசுவார். அதில் வரும் வடிவேலுவாக சிஎஸ்கே ரசிகர்களையும், சர்ஃபராஸ் கானாக விஜய்யையும் மாற்றி, "அய்யா.. நீ இவ்வளவு பேசனோட ஃபீல்டிங் பண்றதை பார்க்கும் போதும், பிளேயர்ஸை பாராட்டுவதை பார்க்கும் போது எங்களுக்கு என்ன சின்னத்தல ரெய்னாவை பார்க்கிற மாதிரியே இருக்குயா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் எமோஷனல் ரகம்.

சிஎஸ்கே அணியின் அறிமுக விழாவில் சிவகார்த்திகேயன், "அடியேய்.. OG இஸ் பேக் டி" என்பார். அதற்கேற்ப நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், பவுலிங்கில் ஓவர்டன், ஃபீல்டிங்கில் டிவால்ட் பிரெவிஸ் மற்றும் சர்ஃபராஸ் கான் என்று அத்தனை பேரும் மிரட்டினர். இதனால் தி ரியல் ஓஜி இஸ் பேக் என்று சிஎஸ்கே ரசிகர்கள் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ் ரகம்.

நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ஓவர்டன் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அயன் படத்தில் சூர்யா, "நெருப்பு மாதிரி இருந்துச்சுனா" என்று டயலாக் பேசுவார். அதில் வரும் சூர்யாவை சிஎஸ்கே ரசிகர்களாகவும், ஓவர்டனை பார்த்து "மனுஷன் சும்மா தீயா இருக்காருணா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற மாதிரி ரகம்.

பில்லா படத்தில் நினைவு திரும்பிய அஜித் குமார், "I am Back" என்பார். அதுபோல் முதல் 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணி சோர்வுடன் காணப்பட்டது. இப்போது ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் அனைவரும் இணைந்து I am Back என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ரியல் கம்பேக் ரகம்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் "என் பெரிய பையன் ஜட்டி போட்டு வந்தானா நீங்க காலிடா" என்ற வசனம் வரும். அதுபோல் சீனியரான சஞ்சு சாம்சன் அசத்தலாக ஆடி சதம் விளாசினார். இதனால் "என்னோட பெரிய பையன் ஜட்டி போட்டு வந்துட்டான்டா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications