"இந்த பவுலிங் வச்சிக்கிட்டா சோக் பண்ணீங்க" சிஎஸ்கே பவுலிங்கால் மிரண்ட ரசிகர்கள்.. தெறிக்கும் மீம்ஸ்!
மும்பை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசமாக்கி இருக்கிறது. இதனால் உற்சாகம் அடைந்த சிஎஸ்கே அணி ரசிகர்கள், சோசியல் மீடியாவில் மீம்ஸை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஸ்பின்னரான நூர் அஹ்மத் இந்த சீசனில் எப்போதெல்லாம் பவுலிங் செய்ய வருகிறாரோ, அப்போதெல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்துகிறார். நேற்றைய ஆட்டத்தில் 3 ஓவர்களை வீசி வெறும் 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் துரந்தர் படத்தில் வரும் அக்ஷய் கண்ணாவாக மாற்றி, "100 வந்தால் விக்கெட் விழுந்து தானே ஆகணும்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா.

புதுப்பேட்டை படத்தில் அழகம் பெருமாள் தனுஷை பார்த்து, "ஏன்டா இவ்வளவு பெரிய கத்தியை வச்சுக்கிட்டாடா எகிட்ட அவ்வளவு அடி வாங்குன" என்று கேட்பார். அதில் வரும் அழகம் பெருமாளாக சிஎஸ்கே ரசிகர்களையும், தனுஷாக சிஎஸ்கே அணியையும் மாற்றி "ஏன்டா இந்த பவுலிங் லைன் அப்பை வச்சுக்கிட்டாடா இத்தனை மேட் சோக் பண்ணிங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ் ரகம்.

வின்னர் படத்தில் பிரசாந்த்திற்கு ஆரத்தி எடுத்து வரவேற்கும் அவரின் பாட்டி, அதனை வடிவேலு முகத்தில் வீசுவார். அதில் வரும் பிரசாந்தாக கார்த்திக் சர்மாவையும், வடிவேலுவாக சிவம் துபேவையும், பாட்டியாக சிஎஸ்கே அணியையும் மாற்றி, "ஸ்பின்னர்களை அடிக்கணும்னா இனி கார்த்திக் சர்மா தான் வரணும்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் ரகம்.

திருடன் போலீஸ் படத்தில் வில்லன்கள் இருவரையும் பிடித்து வைத்து கொள்ளும் தினேஷ், "ஏன் அண்ணே எங்க அப்பாவை கொலை பண்ணீங்க" என்று கேட்டே டார்ச்சர் செய்வார். அதில் வரும் தினேஷ்வாக சிஎஸ்கே ரசிகர்களையும், வில்லன்களாக சிஎஸ்கே அணியையும், சிவம் துபேவையும் மாற்றி, "அன்னிக்கு ஏன் அண்ணே SRH கூட தோத்துப் போனீங்க" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு ரகம்.

அருள் படத்தில் வெள்ளி விற்கிறேன் என்று வடிவேலுவிடம் ரூ.5 ஆயிரம் பணம் பெற்று கொண்டு சிங்கமுத்து செங்கலை கொடுத்து ஏமாற்றுவார். அதில் வரும் மும்பை அணியிடம் வெள்ளி என்ற பெயரில் தீபக் சஹரையும், அதற்கு பதிலாக சிஎஸ்கே அணி பணம் என்று அன்சுல் கம்போஜையும் கொடுத்து ஏமாற்றுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அவன்தான்டா பெரிய வேலையை பார்த்திவிட்டு போய்ட்டான் ரகம்.

-
இதுவரை 17 கல்யாண பத்திரிக்கை வந்திருக்கு மே 28ம் தேதிக்கு.. ஜூன் மாதம் உலகம் அழிய போகுதா? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications