கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்!
மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இங்கிலாந்து பேட்டிங்கின் போது ஒவ்வொரு பந்தும் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியது. இதனை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
கேம் ஆஃப் த்ரோன்ஸ் இணையத் தொடரில் நாயகனான ஜான் ஸ்னோ போரில் இறக்கப் போகிறோம் என்பது தெரிந்த பின்னரும், தனது வாளினை எடுத்து ஒற்றை ஆளாக எதிர்த்து நிற்பார்.. அதனை அப்படியே 254 ரன்கள் என்ற இமாலய இலக்கு இருந்த போது இங்கிலாந்து அணிக்காக இளம் வீரர் ஜேக்கப் பெத்தல் 48 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதனை ரசிகர்கள் ரியல் வாள் தூக்கி நின்னான் பாரு.. வந்து சண்ட போட்ட யாருமில்லை மொமண்ட்.

சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய் ஒரு பெண்ணின் காலில் விழுந்து உயிரை காப்பாற்றி கொண்டு வந்த பின் சசிக்குமாரிடம், "எனக்கு சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா" என்று புலம்புவார்.. நேற்று ஜேக்கப் பெத்தல் ஆட்டத்தை பார்த்துவிட்டு இந்திய ரசிகர்கள், சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா என்று புலம்புவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ்.

வடசென்னை படத்தில் தனுஷை பார்த்து சமுத்திரகனி, "எல்லாம் சரியா செய்ய தெரிஞ்சும் எதுவும் வேண்டாம்னு சொல்றவனை இப்பதான் பாக்குறேன்" என்பார். அதில் வரும் சமுத்திரகனியாக இந்திய ரசிகர்களையும், தனுஷாக அபிஷேக் சர்மாவையும் மாற்றி, ஐசிசி தொடரில் ஒருத்தன் ஸ்கேம் பண்ணி இப்போதான்டா பார்க்கிறேன் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒவ்வொரு ரசிகனின் மனக்குமுறல்.

எம்.குமரன் படத்தின் லிவிங்ஸ்டன், இந்த சிலையோட மொத்த அழகையும் அங்க வச்ச பார்த்தியா என்று காமெடி செய்வார். அதனை அப்படியே பும்ராவுக்கு மாற்றி, "உன்னோட மொத்த திறமையையும் 18வது ஓவர்ல வச்ச பார்த்தியா பும்ரா.. அங்க நிக்கிற மேன் நீ" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நீ லெஜெண்ட்யா மொமண்ட்.

நாடோடிகள் படத்தில் எதற்கெடுத்தாலும் பேனர் அடிக்கும் பழக்கம் கொண்ட ஒருவர், சசிகுமாரையும் வைத்து பேனர் அடித்திருந்தார். இதனால் சசிகுமார், அவர்கள் நண்பர்கள் அதிர்ச்சி அடைவர். அதுபோல் தோனி நேரில் பார்த்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு தோனி காரணம் என்று ஜாலியாக ரசிகர்கள் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள ஜாலியோ ஜிம்கானா மொமண்ட்.

-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications