ஒரு பக்கம் டிரம்ப்.. மறுபக்கம் புடின்.. நடுவில் தளபதி.. ஜோசியரால் மாட்டிய விஜய்.. தெறிக்கும் மீம்ஸ்!
சென்னை: தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நாளன்றே கஜானா காலி என்று பேசி பரபரப்பை எகிற வைத்தார். ஆனாலும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ரூ.1,000, மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இதனை வைத்து சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் வில்லன் ரவி மரியா, சூரியை, "என் சக்கர.. என் சக்கரக்கட்டி" என்று கொஞ்சி அழைப்பார். அதில் வரும் சூரியாக விஜய்யையும், ரவி மரியாவாக திமுகவையும் மாற்றி, "கஜானா காலியா இருந்தா இவ்ளோ பண்ண முடியுமா பிரண்ட்ஸ்? விஜய்ணா அலாவுதீன் அற்புத விளக்கு எதும் வச்சிருக்காரோ?" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு மொமண்ட்.

விஜய்யின் ஜோசியக்காரர் ராதன் பண்டிட், எதிர்காலத்தில் டிரம்ப் மற்றும் புடின் ஆகியோருக்கு நடுவில் விஜய் நடந்து சென்று பிரச்சனைகளை சரி செய்வார் என்று கூறி இருக்கிறார். யாரடி நீ மோகினி படத்தில் ரகுவரனிடம் தனுஷ், "யோவ்.. யோவ்.. நான் எதுக்குமே லாயக்கில்லைனு முடிவே பண்ணிட்டியா" என்று கேட்பார். அதனை அப்படியே மாற்றி ரகுவரனாக ஜோசியக்காரரையும், தனுஷாக விஜய்யையும் மாற்றி, "யோவ்.. யோவ்.. அவனுங்களே என்ன கண்டண்ட் கிடைக்குனு காத்திட்டு இருக்கானுங்க.. நீ வேற ஏன்யா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச்.

திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை 2 ஆண்டுகளுக்கு பின் வழங்கப்பட்டதாகவும், தவெக ஆட்சி அமைந்த ஒரு வாரத்திலேயே மகளிர் உரிமைத் தொகை வழங்கியதாகவும் தவெக ஆதரவாளர் பதிவிட்டுள்ளார். சூரியன் படத்தில் கவுண்டமணி, "எம்ஏ.. பிலாசபி.. எம்ஏ பிலாசபி" என்று கூறுவார். அதில் வரும் கவுண்டமணியாக திமுகவினரை மாற்றி, "எம்ஏ.. பிலாசபி.. எம்ஏ பிலாசபி" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நக்கல் மொமண்ட்.

வரவு எட்டனா செலவு பத்தனா படத்தில் பாஸ்டர் கிருஷ்ணனாக வரும் வடிவேலு, வீரபாண்டி.. நீ இப்போ என்ன பண்ற.. என் பொண்ணுக்கு 50 பவுன் நகை போடுற.. கல்யாண செலவையும் நீயே பார்த்திக்கிற.. என்று தியாகுவை வம்பு இழுப்பார். அதில் வரும் வடிவேலுவாக தவெகவினரையும், தியாகுவாக அனிருத்தையும் மாற்றி, "பிஜிஎம் இல்லாம அண்ணன் பேசுறதை சுத்தமா கேக்க முடியலை.. நீ என்ன பண்ற.. திருச்சி இடைத்தேர்தல்ல ஜெயிச்சு, கீ போர்ட் எடுத்துகிட்டு சட்டசபைக்கு போற.. அங்க போயில் ராவண மவன்டா, ஒரு பேரே வரலாறுலாம் போடுற" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ரசிகர் கூட்டம்னா சும்மாவா மொமண்ட்.


-
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
உள்துறை பொறுப்பை வேறு அமைச்சருக்கு ஒப்படைக்க முதல்வர் விஜய் திட்டம்? தமிழக அரசியலில் பரபரப்பு! -
தமிழக அரசியலில் விஜய்யின் புதிய 'ஃபார்முலா'.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் ஏன் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்? -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
சிக்கும் செந்தில் பாலாஜி? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தோண்டப்படும் டாஸ்மாக் முறைகேடு! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்!










Click it and Unblock the Notifications