யாரு வந்தாலும் ஓடவிட்டு அடிக்கிறான்டா பேட் கம்மின்ஸ்.. சோகத்தில் ரோகித் சர்மா.. தெறிக்கும் MI மீம்ஸ்
மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதனால் இனி மும்பை அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியும் வாழ்வா சாவா ஆட்டம் தான். இது தொடர்பாக ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
சுந்தரபாண்டியன் படத்தில் ஆடுகளம் நரேன், "உங்கள் ஊரில் நீங்க எப்படியோ.. அதுமாதிரி நாங்க.. எங்கள் ஊருல" என்பார். அதில் வரும் ஆடுகளம் நரேனாக மும்பை அணியையும், எதிரில் இருக்கும் தென்னவனாக சிஎஸ்கே அணியையும் மாற்றி, "உங்க டீம்ல துபே எப்படியோ.. அதே மாதிரி எங்க டீம்ல சூர்யகுமார் யாதவ்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆள விடுங்கடா சாமிகளா ரகம்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அப்புக்குட்டியின் மாமியார், "கண்ணை கட்டலைனாலே இவனுக்கு பானை எட்டாது.. முடிஞ்சா பானைய அடிடா பார்க்கலாம்" என்று வம்புக்கு இழுப்பார். அதில் வரும் மாமியாராக நீடா அம்பானியையும், அப்புக்குட்டியாக ஹர்திக் பாண்டியாவையும் மாற்றி, "ரோகித் இருந்தாலே இவனுங்க ஜெய்க்க மாட்டாங்க.. ரோகித் சர்மாவும் இல்லைனா இப்படிதான்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒன் ஃபேமிலி ஸ்பெஷல் ரகம்.

மின்சார கண்ணா படத்தில் வரும் மன்சூர் அலிகான் தனது மகன் கரணை பார்த்து, "சுட முடியாதுடா.. இந்த துப்பாக்கியில தோட்டாவும் இல்ல.. ஒன்னும் இல்ல" என்பார். அதில் வரும் மன்சூர் அலிகானாக ரோகித் சர்மாவையும், கரணாக ஹர்திக் பாண்டியாவையும் மாற்றி, "பேட் கம்மின்ஸ் என்னை பார்த்தா தான் ஓடவிட்டு அடிப்பான்னு உள்ளேயே உட்கார்ந்து இருந்தேன்.. நான் இல்லைனாலும் ஓட விட்டு அடிக்கிறான்டா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எப்படி வந்தாலும் அடிக்கிறான்டா மொமண்ட்.

வேலாயுதம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், "இது எங்க வேலாயுதம் அண்ணன் இல்ல" என்று ஒரு சிறுமி கத்துவார். அதில் வரும் சிறுமியை மும்பை இந்தியன்ஸ் ரசிகராக மாற்றி, "இல்ல.. இது எங்கள் மும்பை இந்தியன்ஸ் அணியே இல்ல" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இது இப்போதான் தெரியுதாடா மொமண்ட்.

களவாணி படத்தில் பால்டாயில் குடித்து மயக்கத்தில் இருக்கும் கஞ்சா கருப்பை பார்த்து வயதானவர் ஒருவர், "பிளடி ராஸ்கல்.. கல்யாணம் ஆகி 2 குழந்தையை வச்சுக்கிட்டு பால்டாயிலா குடிக்கிற பால்டாயில்" என்று பேசுவார். அதில் வரும் கஞ்சா கருப்பாக மும்பை அணியையும், வயதானவராக கிளாசனையும் மாற்றி, "பிளடி ராஸ்கல்.. பேட்டிங் பிட்ச்சை போட்டு ஜெய்க்கவா பார்க்கிற" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு ரகம்.

-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications