"நீயெல்லாம் ரவுடி ஐயராடா.. பஞ்சாப் அணியையும் சிஎஸ்கே தான் காப்பாற்றணும் போல" தரமான மீம்ஸ்!
மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐதராபாத் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. ஐதராபாத் அணியின் எழுச்சி காரணமாக ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து சோசியல் மீடியாவில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
படிக்காதவன் படத்தில் தனுஷ் பெண் பார்க்க சென்ற போது அவரின் அண்ணி, "ராக்கி எல்லாரும் சேர்ந்து உன்னைய மாட்டிவிட பாத்துட்டாங்க.. போற போக்க பார்த்த நாங்கள் கூட உனக்கு ஹெல்ப் பண்ண முடியாது போலயே" என்பார். அதில் வரும் அண்ணியாக சிஎஸ்கே அணியையும், தனுஷாக பஞ்சாப் அணியையும் மாற்றி, "டேய் ஸ்ரேயாஸ்.. போற போக்க பாத்தா நாங்கதான் உனக்கு ஹெல்ப் பண்ணணும் போலயே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சிக்கிட்டான்டா சித்தப்பு ரகம்.

களவாணி படத்தில் விமல் டாஸ்மாக்கில் அமர்ந்து கொண்டு, "நீயெல்லாம் பேக்கரி வச்சிருந்தா பெரிய ஆளாடா" என்று வம்பு இழுப்பார். அதில் வரும் விமலாக ஐதராபாத் அணியையும், பேக்கரி கடை ஓனராக பஞ்சாப் அணியையும் மாற்றி, "எவ்வளவு பெரிய டார்கெட் கொடுத்தாலும் சேஸ் பண்ணிருவியாடா நீ" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நீயெல்லாம் ரவுடியாடா ரகம்.

முத்து படத்தில் ரஜினியை பார்த்து பொன்னம்பலம், "இப்படி அநியாயமா எங்க ஜமீர்தாரை கொலை பண்ணிட்டியேடா" என்று கூறிவார். அதில் வரும் பொன்னம்பலமாக ஆர்சிபி அணியையும், ரஜினியாக பஞ்சாப் அணியையும் மாற்றி, "இப்படி ஐதராபாத் அணியோட தோற்று போய் அநியாயமா எங்களை 3வது இடத்திற்கு தள்ளிட்டீங்களேடா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் இணையத் தொடரில் தோற்றுபோவோம் என்று தெரிந்த பின், ஜான் ஸ்னோ ஒற்றை ஆளாக வாள் தூக்கி போரில் நிற்பார். அதுபோல் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்காக கூப்பர் கானலி தனியாக நின்று சதம் விளாசியதை ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் வாள் தூக்கி நின்னான் பாரு ரகம்.


-
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
"விதியுடன் மோது.. ஆனால் விசிலுடன் மோதாதே" இஷான் கிஷனை வச்சு செய்யும் சிஎஸ்கே ரசிகர்களின் மீம்ஸ்! -
"8 பேர் காயமான டீமை அடிச்சிட்டு சாமி போட்ட ஆட்டம் இருக்கே" சுப்மன் கில்லை வெளுக்கும் சிஎஸ்கே மீம்ஸ்! -
இதுவரை 17 கல்யாண பத்திரிக்கை வந்திருக்கு மே 28ம் தேதிக்கு.. ஜூன் மாதம் உலகம் அழிய போகுதா? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications