விஜயகாந்த்துக்கு பதில் இமான் அண்ணாச்சியை கூட்டி வந்த திமுகவினர்.. கலகல மீம்ஸ்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைத்தளத்தில் தேமுதிக நேர்காணல் குறித்தும், திமுக இன்னமும் தேமுதிக கூட்டணிக்காக காத்திருப்பது குறித்தும், சமூக வலைத்தளங்களில் கேலி சித்திரங்கள் உலவுகின்றன.

கடந்த சனிக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டம் வேடலில், தேமுதிக சார்பில் திருப்புமுனை மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில், கூட்டணி குறித்த முடிவை விஜயகாந்த் எடுப்பார் என்ற நம்பிக்கையில் அதிமுக தவிர ஏறத்தாழ அனைத்து கட்சிகளுமே வாழ்த்து தெரிவித்திருந்தன.

ஆனால், மாநாட்டில் எந்த ஒரு முடிவையும் விஜயகாந்த் அறிவிக்கவில்லை. ஆட்சியை தனது தலைமையில் நடத்த வேண்டுமா அல்லது, ஆட்சியமைக்க ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவை தெரிவிக்க வேண்டுமா என்பது குறித்துதான், கட்சி தொண்டர்களிடம் விஜயகாந்த் கருத்து கேட்டார்.

கிங்

கிங்

விஜயகாந்த் தனது தொண்டர்களை பார்த்து, நான் கிங்காக இருக்க வேண்டுமா, கிங் மேக்கராக இருக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். தொண்டர்களில் பெரும்பாலானோர், கிங் என கோஷமிட்டனர். பார்த்தீர்களா.. என்னை கிங்-ஆக இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் கூறுகிறார்கள் என்று மீடியாக்காரர்களை பார்த்து தெரிவித்தார் விஜயகாந்த்.

திமுக

திமுக

விஜயகாந்த்தின் இந்த பேச்சு, யாருக்கு எரிச்சல் ஏற்படுத்தியதோ இல்லையோ, கிங் மேக்கராக அவரை பயன்படுத்திக்கொண்டு, கிங்காக ஆட்சியை நடத்த வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கும் திமுகவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும்.

இமான் அண்ணாச்சி

இமான் அண்ணாச்சி

திமுக தலைவர் கருணாநிதி பல முயற்சிகள் எடுத்தும், பகிரங்க அழைப்புவிடுத்தும், விஜயகாந்த் அக்கட்சி பக்கம் செல்வது குறித்து இன்னும் அறிவிக்காமல் இருப்பதை கேலி செய்து இந்த படம் சமூக வலைத்தளத்தில் சுற்றிக்கொண்டுள்ளது. விஜயகாந்த்துக்கு பதிலாக உருவத்தில் ஓரளவுக்கு ஒற்றுமை கொண்ட இமான் அண்ணாச்சியை கட்சிக்குள் கூட்டி வந்துவிட்டதாக கேலி செய்கிறது இந்த டிவிட்.

நேர்க்காணல்

நேர்க்காணல்

தேமுதிக நேர்காணலிலும், காஞ்சிபுரம் தேமுதிக மாநாடு பற்றி வேட்பாளர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கும் என்ற யூகத்தின் பேரிலும் ஒரு மீம்ஸ் ரவுண்ட் அடித்து வருகிறது. அதில், காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த் என்ன பேசினார் என்ற கேள்வி கேட்கப்படுவதாகவும், எனவே விருப்பமனு தர வந்தவர்கள் ஓட்டம் பிடிப்பதாகவும் கேலி செய்யப்பட்டுள்ளது.

வழவழ பேச்சு

வழவழ பேச்சு

காஞ்சிபுரம் மாநாட்டில், விஜயகாந்த் பேசியது ஒன்றுமே புரியவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனம் செய்திருந்தனர். ஒரு வார்த்தையை பேசி முடிப்பதற்குள், வேறு ஏதோ ஒரு டாப்பிக்கை பேசுவதும், அந்த வார்த்தையை முடிப்பதற்குள், வேறு எதையும் பேசுவதுமாக வழவழப்பாக விஜயகாந்த் பேச்சு இருந்ததுதான் இந்த மீம்ஸுக்கு காரணம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+