உனக்கென்னப்பா ஜாலியா இருக்கா.. அப்படியா? அப்போ இதைப் பிடி!
சென்னை: இன்றைய சமூக சூழ்நிலையில் மனஅழுத்தமும், மனச்சோர்வும் குறைந்து கொண்டே வருவது இல்லை. வேலைப்பளு, பொருளாதார சுமை, குடும்பப் பொறுப்புகள், சமூகத்தில் நல்ல நிலைக்கு வரவேண்டிய அழுத்தம் இவை அனைத்தும் ஒருவரின் மனநிலையை அதிகமாக பாதிக்கின்றன. அதோடு, சமூக ஊடகங்கள் மூலமாக உருவாகும் ஒப்பீடு உணர்வும் இதற்கு கூடுதல் தீனி ஆகிறது.
பலரும், "எல்லாம் சரியாக தான் இருக்கிறது " என்று வெளியில் போலியான சிரிப்புடன் நடந்து கொள்கிறார்கள். ஆனால் உள்ளுக்குள் அவர்களது மனநிலை பெரும் போராட்டத்தைச் சந்திக்கிறது. உண்மையில் சந்தோஷமாக இருக்கிறோமா இல்லையா என்பதை கேட்க யாருக்கும் நேரமில்லை; நாமே நம்மை கேட்கவும் நேரம் எடுத்துக் கொள்வதில்லை.
ஒரு முக்கியமான உண்மையை பலர் மறந்துவிடுகிறார்கள். சந்தோஷம் நம்முடைய கையில்தான் இருக்கிறது. ஆனால் அதை புரிந்துகொள்ளாமல், அடுத்தவரின் வாழ்க்கையை பார்த்து பொறாமைப்படுவதோடு, அவர்களைப்போல் வாழ வேண்டும் என்ற தேவையில்லாத ஆசைகளை நாமே உருவாக்கிக்கொள்கிறோம். இதுவே தேவையில்லாத டிப்ரெஷன், ஸ்ட்ரெஸ் வர வழிவகுக்கிறது.
வேலை, கடன், சமூகத் தடை, போட்டிகள் என நம் வாழ்க்கை ஒரே சக்கரம் போல சுழன்று கொண்டே செல்கிறது. நமக்கு மட்டும் இல்லங்க ஸ்ட்ரெஸ் இல்லாத மனுஷனே நீங்க பார்க்க முடியாது. அப்படி ஸ்ட்ரெஸ் இல்லாத நபரை உங்களுக்கு தெரிஞ்ச இந்த மீம்ஸ்களை அவங்களுக்கும் ஷேர் பண்ணுங்க.










Click it and Unblock the Notifications
