கொளுத்தும் வெயில்... ‘அந்நியன்’களாக மாறும் அம்பிகள்... மழைக்காக ‘காத்திட்டு இருக்கோம்’!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரங்கள் ஒருபுறம் தீப்பொறி பறக்க நடந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் நிஜமாகவே தீயாக வேலை செய்கிறது சூரியன்.
கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழையைத் திட்டித் தீர்த்தவர்கள் எல்லாம், இப்பொது வெயிலுக்கு இதமாக மழை பெய்யாதா என ஏங்கி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், புண் பட்ட மனங்களுக்கு ஆறுதலாக மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் கிச்சு, கிச்சு மூட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஒரு கோடி கொடுத்தாலும்...
உண்மையிலேயே இன்று பலரது நிலைமை இப்படித் தான். சொர்க்கமே என்றாலும் அது வீட்டுக்குள் இருப்பது போலாகுமானு தான் பாடிட்டு இருக்காங்க...

ஈஈஈபி...
பகலில் சூரியன் கொளுத்துகிறதென்றால், இரவில் புளுக்கம் வாட்டுகிறது. இப்படிப் பட்ட சூழ்நிலையில் இரவில் பவர்கட்டும் சேர்ந்து விட்டால், அம்பிக்கள் அந்தியன்களாகி விடுவார்கள்.

மரங்களான ஏடிஎம்கள்...
அந்தக் காலத்தில் வெயிலில் செல்வோர், ஆங்காங்கே மர நிழலில் ஓய்வெடுத்துக் கொள்வார்கள். இப்போது ஏடிஎம் மையங்களிலேயே தஞ்சம் அடைகிறார்கள்.

ஷ்ஷப்பா மிடியலை...
வெயிலில் அலைந்து விட்டு வீடு வருபவர்கள் அனைவரும் முதலில் செய்ய நினைப்பது இதைத்தான்.

அப்டி வாங்க வழிக்கு...
எப்டியோ சிக்னலை மதிச்சா சரி தான்.

வீட்டுக்குள்ளேயே...
கொளுத்தும் வெயில் காரணமாக வெளியில் அலைய வேண்டாம் என அரசு அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அதைத் தான் வேறு வழியில் சொல்கிறார்கள் இந்த மீம்ஸ் தயாரித்த பாசக்கார நெட்டிசன்கள்.

ரமணன் சார்... ப்ளீஸ் ஹெல்ப்
கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை தொடரும் என நம் வயிற்றில் புளியைக் கரைத்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ஆனாலும், அவர் வாயால் மழை வரும் என சொல்லமாட்டாரா என மக்கள் ஏங்குகின்றனர்.

வெயில் வரவேற்கிறது...
சென்னை வெயில் உங்களை அன்புடன் 110 டிகிரியுடன் சுடச்சுட வரவேற்கிறது.

கவனமா இருங்க பாஸு...
சூரியன் தீயாய் வேலை செய்வதால், தண்ணீர் தொட்டிகள் பாய்லர்களாக மாறி விட்டன. எனவே, எப்போதும் கவனமாக குழாயைத் திறக்க வேண்டும். இல்லாவிட்டால், வடிவேலு நிலை தான் நமக்கும்.

காத்துட்டு இருக்கோம்...
அடுத்து இரு நாட்களுக்கு வெயில் தொடரும், அனல்காற்று வீசும் என ஹாட் செய்தியாக வானிலை ஆய்வு மையம் கூறுவது தொடர்கதையாகி விட்டது. ஆனாலும், நாஞ்சில் சம்பத் மாதிரி, ‘மழை வரட்டும்னு காத்திட்டிருக்கோம்' நாம்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications