For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடியா இல்ல இது சிரியாவா? துப்பாக்கிச் சூடு குறித்து நெட்டிசன்கள் குமுறல்

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் மீம்ஸ் வடிவத்தில் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நேற்று பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 12 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு பொதுமக்களும், தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியான சில மீம்ஸ் வடிவிலான கண்டனங்கள் இங்கே தொகுக்கப் பட்டுள்ளது.

காணவில்லை:

காணவில்லை:

தூத்துக்குடி எம்எல்ஏ-வான திமுக-வைச் சேர்ந்த கீதாஜீவனைக் காணவில்லை என இந்த மீம்ஸ் கூறுகிறது.

தூத்துக்குடியா சிரியாவா?

தூத்துக்குடியா சிரியாவா?

தூத்துக்குடி உள்நாட்டுப் போர் நடைபெறும் சிரியா போல் காட்சியளிக்கிறது என வேதனை தெரிவிக்கிறது இந்த மீம்ஸ்.

தமிழர்களுக்கு எதிரி:

தமிழர்களுக்கு எதிரி:

ஈழத்திலாவது அடுத்த இனத்தவன் தான் தமிழர்களை சுட்டுக் கொன்றான். ஆனால் தூத்துக்குடியில் தமிழர்களே தமிழர்களை வெறித்தனமாக சுட்டுக் கொலை செய்துள்ளதாக கண்டனம் தெரிவிக்கிறது இந்த மீம்ஸ்.

நிவாரண நிதி:

நிவாரண நிதி:

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி கொடுத்தால், மக்கள் நடந்த சம்பவத்தை மறந்து விடுவார்கள் என அரசியல்வாதிகளைச் சாடுகிறது இந்த மீம்ஸ்.

English summary
Memes comdemning Tuticorin firing incident is revolving in social networks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X