"எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை"... ஜாலி செய்யும் எம்எல்ஏக்களை வச்சு செய்யும் மீம்ஸ்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 19 எம்எல்ஏக்களின் எதிர்ப்பு தமிழக அரசியலில் களைகட்ட, எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் அடிக்கும் கூத்துகள் சமூக வலைதளங்களில் களை கட்டுகின்றன.

முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்ததோடு கட்சியும் இவர்கள் வசம் வைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முகாத்திரமாக தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

19 எம்எல்ஏக்கள் அணி மாறிவிடாமல் இருப்பதற்காக அவர்கள் அனைவரும் புதுச்சேரி தி விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். அங்கு அவர்கள் ஜாலியாக ஊஞ்சலாடி விளையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் மீம்களாக வலம் வருகின்றன. அவற்றில் சில:

எம்எல்ஏக்களின் மைண்ட் வாய்ஸ் என்ன?

புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்எல்ஏக்களின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும் என்று நெட்டிசன் ஒருவர் தட்டிவிட்டுள்ள மீம்.

அதிர்ஷ்டம் ஒரு முறை தான் கதவைத் தட்டும்னு சொன்னாங்க, 6 மாசத்துல திரும்பத் தட்டுதே.

ரிசார்ட் விளம்பரம்

தமிழகமானாலும், புதுச்சேரியானாலும் 6 மாதத்திற்கு ஒருமுறை சொகுசு ரிசார்ட்டை மக்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது எம்எல்ஏக்களை அடைத்து வைத்திருக்கும் படலம். இதையே மீம்ஸாக போட்டுள்ளார் நெட்டிசன் ஒருவர்.

எல்லா நாளும் கார்த்திகை

நாங்க எல்லோரும் ஒற்றுமையா இருக்கோம், அதுல என்னா தப்பு இருக்கு. நாங்க எல்லோரும் ஒன்னா தங்கியிருக்கக் கூடாதா என்று கேட்டு வருபவர் தங்க தமிழ்ச்செல்வன், அவர் விடுதியில் உள்ள பூங்காவில் விளையாடும் போட்டோக்களை போட்டு வானத்தைப் போல பட பாடலை வைத்து கலாய்த்துள்ளனர்.

வாடகை எவ்வளவு?

அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் விடுதியின் வாடகை எவ்வளவு தெரியுமா?.விடுதி வாடகையை போட்டு ஏழை மக்கள் தங்கியிருக்கும் விடுதியின் வாடகை என்று வெளிச்சம் போட்டு காட்டுகிறார் நெட்டிசன் நாகராஜ சோழன் எம்எல்ஏ.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes trolling in social media about MLAs halted at Puducherry The Wind Flower Resorts and Spa.
Please Wait while comments are loading...