அவரு குருக்களா இல்ல குருவாயூர் ஜவுளிக்கடை ஓனரா.. நெட்டிசன்ஸ் கலகல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: அபயாம்பிகை அம்மனுக்கு குருக்கள் சுடிதார் அலங்காரம் செய்தது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோவில் அபயாம்பிகை அம்மனுக்கு குருக்கள் சுடிதார் அலங்காரம் செய்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

இதையடுத்து சுடிதார் அலங்காரம் செய்த இரண்டு குருக்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடிச்சுவிட வேண்டியதுதானே?

மயூரநாதர் கோவிலில் அம்மனுக்கு சுடிதார் அலங்காரம்: 2 குருக்கள் நீக்கம் - செய்தி
# அம்மன் தான் கனவில் வந்து சொல்லுச்சுனு அடிச்சுவிட வேண்டியதுதானே?

பாவமப்பா பாவம்

எங்கள் கருப்பனும், சுடலைமாடனும் என்றோ
அரை ட்ராயருக்கு மாறி விட்டார்கள்.
அதில் அழகாய் கம்பீரமாய் இருக்கிறார்கள்
அம்மனுக்கு சுடிதார் போட்டதில் கலாட்டா ஏன்?
வீதியுலா வருகையில் தமிழ்பெண்களை பார்த்து ஆவல் கொண்டிருந்திருக்கலாம்.
உடை மாற்றத்திற்கு
பணிஇடை நீக்கமா ! பாவமப்பா பாவம்

குருவாயூர் ஜவுளிக்கடை ஓனரா

மயூரநாதர் கோவிலில் அம்மனுக்கு சுடிதார் அலங்காரம்: 2 குருக்கள் நீக்கம் - செய்தி
அவரு குருக்களா இல்ல குருவாயூர் ஜவுளிக்கடை ஓனரா.

ரூட்ட மாத்தியிருக்காப்டி

ஆண்டாள் பஞ்சாயத்து அப்போ நித்தி ஆட்டைய கலைச்சாப்ள..இப்போ மீனாட்சியை வச்சு பெர்ப்பார்ம் பண்ணலாம்ன்னு பார்த்தா ஒரு குருக்கள் அம்மனுக்கு சுடிதார் போட்டுவுட்டு ரூட்ட மாத்தியிருக்காப்டி

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens making fun of Chuditar decoration for Abayambigai amman issue. The priests have been dismissed for decorating Abayambigai amman in Chuditar in the Mayuranathar temple.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற