தீபாம்மா.. எங்க இருக்கிங்க?? உங்களுக்கு போயஸ் கார்டன் வேனுமா??
சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு நடப்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: சசிகலா குடும்பத்தினர் மற்றும் ஜெயா டிவி ஆகிய இடங்களில் ஐடி ரெய்டு நடப்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவி அலுவலகம் உட்பட 190 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரால் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர் என கூறப்படுகிறது.
நேற்று முதல் நடைபெறும் ரெய்டால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
பக்குனு இருக்குது!
திருவாரூர் ஊர்ப்பேரு அடிக்கடி பேசப் படுது! பக்குனு இருக்குது! அடேய்! வீடு மாத்தி போயிடாதீங்க!
|
ஷங்கர் ஸ்டைல்தான்
7 லட்சம் ரூபாய் - ஐடி அதிகாரிகள் பயன்படுத்திய வாடகை கார்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது... ஒரே ஷங்கர் ஸ்டைல்தான்..
|
எல்லாரும் சிரிக்கிறாங்க
டிமானிடைசேஷனுக்குப் பிறகு கள்ளப்பணமெல்லாம் ஒழிஞ்சி போச்சே, பிறகெதுக்கு ஐடி ரெய்டுன்னு கேட்டா எல்லாரும் சிரிக்கிறாங்க
|
பாதிதான் கணக்குல வந்துருக்கும்
ஐடி ரெய்டில் சிக்கின முழு பணமும் யாரு எடுத்துப்பாங்க?
எப்படியும் சிக்குனதுல பாதிதான் கணக்குல வந்துருக்கும்
|
எதிர்த்து நின்னா..
ஐடி ரெய்டு நடந்து அடங்கிப்போனா அவன் நமக்கு அடிமை..
ஐடி ரெய்டு நடந்தும் எதிர்த்து நின்னா நாம அவனுக்கு அடிமை
|
போயஸ்கார்டன் வேனுமா?
தீபாம்மா.. எங்க இருக்கிங்க?? உங்களுக்கு போயஸ் கார்டன் வேனுமா???
|
தாமரை மலர்..
கோ பூஜைக்கு தாமரை மலரை வச்சி பண்ணி இருக்காரு பாருங்க அதான் டிடிவி தினகரன்...












Click it and Unblock the Notifications