ஏன் கமல் கட்சியில் சேரலாமுன்னு இருக்கீங்களா? ஜெயக்குமாரை வறுக்கும் நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசனை கட்டம் கட்டி விமர்சிக்கும் அமைச்சர் ஜெயக்குமாரை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். கருத்தை சொல்ல அரசியலுக்கு வர தேவை இல்லை, வாக்குரிமை இருந்தால் போதும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை காந்தி மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்தார். கமல் அதிமுக அரசின் மீது சேற்றை வாரியிறைப்பதாகவும் அவர் சாடினார்.

கமலுக்கு அரசியலுக்கு வரத் தைரியம் இல்லை என்றும் தைரியம் இருந்தால் கமல் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் ஜெயக்குமார் கூறினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமாரை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில

பாடம் எடுக்க வேண்டாம்

தைரியத்தை பற்றி விருமாண்டிக்கு பாடம் எடுக்க வேண்டாம்... என்கிறார் இந்த நெட்டிசன்

Kamal Hassan Ready to do Anything money Says CV Shanmugam-Oneindia Tamil

முட்டாள்தனத்தின் அடையாளம்

அரசியலில் இருப்பவர்கள் மட்டும் தான் அரசியல் குறித்த கருத்துகளை கூற வேண்டுமென்பது அடிமுட்டாள்தனத்தின் அடையாளம்.. என்கிறார் இந்த வலைஞர்

சூப்பர்ஸ்டார் ஆக்குற மொமென்ட்

சும்மா இருப்பவரை சீண்டி சூப்பர்ஸ்டார் ஆக்குற மொமென்ட் என்கிறார் இந்த நெட்டிசன்

அரசியலுக்கு வரத்தேவையில்லை

தன் கருத்தை சொல்ல அரசியலுக்கு வர தேவை இல்லை... வாக்குரிமை இருந்தால் போதும்... என்கிறார் இந்த நெட்டிசன்..

கமல் கட்சியில்..

ஏன் கமல் கட்சியில் சேரலாமுன்னு இருக்கீங்களா எனக் கேட்கிறார் இந்த நெட்டிசன்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens making fun of Minister Jayakumar for scolding Kamal. Jayakumar Challenged Kamal to come political.
Please Wait while comments are loading...