கண்ணை மூடி கண்ணை திறக்கறதுக்குள்ள அஞ்சு நாள் ஓடிப்போச்சே.. #சசிகலா

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சசிகலாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்-வீடியோ

  சென்னை: சசிகலா சிறைக்கு திரும்பியது குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள கணவர் நடராஜனை காண 5 நாட்கள் பரோலில் வெளியே வந்திருந்தார் சசிகலா. பரோல் முடிந்ததை அடுத்து அவர் மீண்டும் நேற்று சிறையிலடைக்கப்பட்டார்.

  சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்க்க தொடங்கி விட்டனர். அவர்களின் கருத்துக்களில் சில..

  சும்மா விடாது பாத்துக்குங்க

  தியாகத்துருவம் சின்னம்மா தீபாளி துனிமனி எடுக்க விட்டீங்களடா, இந்த பாவம் சும்மா விடாது பாத்துக்குங்க! என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்..

  சென்றதும் தெரியவில்லை

  கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இப்படி சிந்தித்திருக்கிறேன். சசிகலா; வந்தது தெரிந்தது, இருந்தது தெரியவில்லை, சென்றதும் தெரியவில்லை...! என கலாய்க்கிறார் இந்த வலைஞர்

  திரும்பினார் பன்னீர்ச்செல்வம்

  பெங்களூரு சிறைக்கு சென்றார் சசிகலா.. தமிழ்நாடு திரும்பினார் பன்னீர்ச்செல்வம்.. என்கிறது இந்த டிவிட்

  தீபாவளி ஷாப்பிங்

  5 நாள்கள் பரோல் முடிந்து பெங்களூர் சிறை திரும்புகிறார் சசிகலா சிறைக்கு போகுதா இல்லை தீபாவளி ஷாப்பிங் போகபோதோ யாருக்கு தெரியும் என்கிறது இந்த டிவிட்..

  டைமிங் சாங்

  5 நாள்கள் பரோல் முடிந்து சிறை திரும்புகிறார் சசிகலா போறாளே பொண்ணுத்தாயி பொலபொலவென்று கண்ணீர் விட்டு தண்ணீரும் மண்ணும் தந்த ஊர விட்டு.. என் டைமிங் பாடலை பாடுகிறார் இந்த நெட்டிசன்..

  அடுத்தது பொங்கல் தான்

  #பரோல்முடிந்து பெங்களுர் சிறைநோக்கி செல்கிறார் #சசிகலா #அடுத்தது பொங்கல் தான் என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்..

  அஞ்சு வருடம் மாதிரில..

  கண்ணை மூடி கண்ணை திறக்கறதுக்குள்ள அஞ்சு நாள் ஓடிப்போச்சே -சசிகலா அஞ்சு நாளும் அஞ்சு வருடம் மாதிரில நகர்ந்துச்சு-எடப்பாடி #மைண்ட்வாய்ஸ் என கலாக்கிறது இந்த டிவிட்..

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens making fun of Sasikala returns to Jail. Sasikala had come to chennai for five days parole.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற