இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு..?! #மவுனவிரதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சிறையில் மெளன விரதம் இருக்கும் சசிகலா-டிடிவி தினகரன்- வீடியோ

  சென்னை: சசிகலா பெங்களூரு சிறையில் மவுன விரதம் இருப்பதாக டிடிவி தினகரன் கூறியது குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றனர்.

  பெங்களூரு சிறையில் இன்று சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன் அவர் ஜெயலலிதா நினைவு நாளில் இருந்து மவுன விரதம் மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும் ஜனவரி மாதம் இறுதி வரை சசிகலா மவுன விரதம் மேற்கொள்வார் என்றும் அவர் கூறினார்.

  இந்நிலையில் இதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில..

  தெரியவா போகிறது..

  ஜெயலலிதா நினைவு நாளில் இருந்து சசிகலா மவுன விரதம் இருக்கிறார்: டிடிவி தினகரன் #TTVDhinakaran #Jayalalitha #sasikala
  வெளியில் இருக்கும் மங்குனிகளுக்கு என்ன தெரியவா போகிறது

  வாயடைச்சு போயிட்டாங்க போல..

  சிறையில் சசிகலா மவுன விரதம் இருக்கிறார் - தினகரன்
  நீங்க ஜெயிச்சத கேள்விபட்டு வாயடைச்சு போயிட்டாங்க போல சார்...

  மவுன விரதம்னு சொன்னாங்க..

  சிறையில் சசிகலா மவுன விரதம் இருக்கிறார்: டிடிவி தினகரன் தகவல்
  அப்படினு சின்னம்மாவே சொன்னாங்க, நான் மௌன விரதம் பேசமாட்டேனு... DIG ரூபா ஒழிக தியக தலைவி சின்னம்மா வாழ்க

  அப்பசரி..

  ஜெயலலிதா நினைவு நாள் முதல் சசிகலா மவுன விரதம் இருந்து வருகிறார்...
  #டிடிவி தினகரன்...
  இத யாரு சொன்னா....
  சின்னம்மாவே சொன்னாங்க...
  #அப்பச்சரி...

  வாயைத்திறந்து கேட்டாங்க..

  #ஜெயலலிதா நினைவு நாளில் இருந்து #சசிகலா மவுன விரதம்: டி.டி.வி பேட்டி
  ஜெயிலர் : அட பாவிங்கள நேத்து தாண்டா 10 இட்லி பத்தல எக்ஸ்ட்ரா 2 இட்லி வேணும்னு வாயைத்திறந்து கேட்டாங்க

  நம்புற மாதிரியா இருக்கு..

  ஜெயலலிதா நினைவு நாள் முதல் தியாகத்தலைவி #சின்னம்மா மவுன விரதம் இருந்து வருகிறார் - டிடிவி தினகரன்.
  இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு...

  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

  English summary
  Netizens making fun of Sasikala's silence fasting. Dinakaran says Sasikala keeping silence fasting from Jayalalitha memorial day.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற