நெஞ்சுவலி லிஸ்டில் மவுனவிரதம்.. பெண் சாணக்கியர் சின்னம்மா! அதகளப்படுத்தும் நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா மவுன விரதம் இருப்பதால் விசாரணை கமிஷனில் ஆஜராக முடியாது என தெரிவித்திருப்பதை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஆர்கே நகர் தேர்தல் முடிவுக்குப்பிறகு பெங்களூரு சிறையில் டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்தார். பின்னங்ர செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறைக்குள் சசிகலா மவுன விரதம் மேற்கொண்டிருப்பதாக கூறினார்.

இந்த மவுன விரதம் ஜனவரி மாதம் இறுதிவரை நீடிக்கும் என்றும் அவர் கூறினார். அப்போதே ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு பயந்து சசிகலா மவுன விரதம் மேற்கொண்டிருக்கிறாரா என கேட்டு செய்தி வெளியிட்டது நமது ஒன் இந்தியா தமிழ்.

மவுனவிரதத்தால் மறுப்பு

மவுனவிரதத்தால் மறுப்பு

இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் மவுனவிரதத்தை கேடயமாக வைத்து விசாரணை கமிஷனில் ஆஜராக முடியாது என கூறியுள்ளார் சசிகலா. இதனை மரண கலாய் கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.

நெஞ்சுவலி வரிசையில்

அரஸ்ட்டானா நெஞ்சுவலி எனும் வரிசையில்,இப்ப
விசாரணைன்னா #மவுனவிரதம் எனும் புதிய யுத்தியை கண்டுபிடித்த பெண் சாணக்கியர் சின்னமாவை வாழ்த்தி வணங்குகிறோம்..

அமைதியா இருப்பாங்க தானே

ஹாஹா.. மவுனவிரதம்னு சொல்லிட்டா எல்லாரும் அமைதியா இருப்பாங்க தானே

எழுதி கொடுப்பாரா?

சசிகலா மவுன விரதம் இருப்பதால், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் அவரது சார்பாக வழக்கறிஞர் ஆஜராவார் - கர்நாடக சிறைத்துறை
வழக்கறிஞர் கிட்ட மட்டும் எப்படி பேசுவார்.. ஒரு வேளை எழுதி கொடுப்பாரா?
சரி எப்படியென்றால் ஆறுமுகசாமியின் கேள்விகளை எப்படி அறிந்துகொண்டார்

பின்னி பெடல் எடுத்துவிடுவார்களே?

ஒரு சாதாரண கைதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகாமல் மவுனவிரதம் இருக்கிறேன் என்றால் விட்டு விடுவார்களா ? பின்னி பெடல் எடுத்துவிடுவார்களே ?

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens making fun of Sasikala's silent fasting. Sasikala's lawyer says that she can not appear in the inquire commission due to her silent fasting.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X