"தக்காளி" போல இருக்கீங்க! விலை ஏறிடுச்சு கடத்திட போறாங்க! தெறிக்கவிடும் நெட்டிசன்கள்! கலக்கல் மீம்ஸ்
சென்னை: தக்காளி விலை சில நாட்களில் கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், தக்காளி விலை உயர்வை வைத்து நெட்டிசன்கள் பல மீம்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
இந்தியாவில் பெரும்பாலான உணவுகளைத் தக்காளியைப் பயன்படுத்தியே சமைப்பார்கள். சைவம் அல்லது அசைவம் என எதுவாக இருந்தாலும் தக்காளி ரொம்பவே முக்கியமாக இருக்கிறது. இதனால் அனைத்து வீடுகளிலும் தக்காளியைத் தவிர்க்க முடியாது.
இதனால் தக்காளி விலையும் ரொம்பவே முக்கியமானதாக இருக்கும். தக்காளி விலை சற்று உயர்ந்தாலும் கூட அது சமையலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கிடையே தக்காளி விலை இப்போது உச்சம் தொட்டு வருகிறது.
விலை உயர்வு: தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை சில நாட்களில் பல மடங்கு அதிகரித்துவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கே ரூ.40க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. அது ஜெட் வேகத்தில் எகிறி நேற்று ஒரு கிலோ ரூ.70ஆக உயர்ந்தது. இதற்கிடையே ஒரே நாளில் தக்காளி விலை பட்டென அதிகரித்து ரூ.100ஐ கடந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி 1200 டன் தக்காளி வரும். இருப்பினும், திடீரென பெய்த கோடை மழை உள்ளிட்ட பல காரணங்களால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. 1200க்கு பதில் இப்போது 700 டன் தக்காளி மட்டுமே கோயம்பேடு மார்கெட்டிற்கு வந்துள்ளது. தக்காளி விலை திடீரென மடமடவென உயர இதுவே காரணமாகச் சொல்லப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், புறநகர்ப் பகுதிகளில் 130 வரையிலும் கூட விற்பனை செய்யப்படுகிறது

மீம்கள்: இந்த மாதம் முழுக்க தக்காளி விலை இப்படியே இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இது பொதுமக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தக்காளியை வைத்து இணையத்தில் பல டிரெண்டிங் மீம்களையும் நெட்டிசன்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர். பிரபல யூடியூப் சேனல் வீடியோவில் இருந்து ஒரு காட்சியை பகிர்ந்த நெட்டிசன், "தக்காளி தானே, விலை கம்மி என்று நினைத்து விடாதீர்கள். நான் கொஞ்சம் காஸ்ட்லி" என்று தெறிக்கவிட்டுள்ளார்.

அதேபோல தக்காளி, சிக்கன், மீன், சிலிண்டர் என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதாகவும் இதேபோல நிலைமை சென்றால் ரொம்பவே மோசம் என மற்றொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

இதை வைத்து பெண் தோழிகளைக் கவரும் மீம்களையும் சிலர் உருவாக்கியுள்ளனர். வடிவேலு காட்சியைப் பகிர்ந்த நெட்டிசன், "தக்காளி கிலோ ₹100.. பாத்து சூதானமா இருங்க டோலி தக்காளினு நெனச்சு தூக்கிட்டு போயிட போராங்க.." எனப் பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர் தங்கம் விலை குறைவதாகச் சொல்கிறார்கள்.. ஆனால், தக்காளி விலையே வாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.

தக்காளி விலை அதிகரித்துள்ளதால் தக்காளி சாதம் விலை சர்ரென ஏற தொடங்கும் என்கிறார் மற்றொரு நெட்டிசன்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் அட்டகாசமான காதல் காட்சியில் தக்காளி விலையை நைசாக கோர்த்துவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

இது பழைய மீம் தான் என்றாலும் இப்போது மீண்டும் டிரெண்டாகிறது. அதாவது பெட்ரோல் விலையை ஓவர்டேக் செய்து தக்காளி செல்வதாகச் சிலர் பதிவிட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications