ஐடி ரெய்டும் காமெடியாம்...பாவம்யா ஜெ.தீபா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜெ.தீபா வீட்டுக்கு வந்த டுபாக்கூர் ஐடி அதிகாரி..வீடியோ

  சென்னை: தீபாவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி என கூறி ரெய்டு நடத்த வந்த நபர் ஓட்டம் பிடித்ததை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

  தீபாவின் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரி வந்துள்ளதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  ஆனால் அந்த நபர் போலீசைக் கண்டதும் ஓட்டம் பிடித்த பின்னர்தான் அவர் போலி அதிகாரி என தெரியவந்தது. இந்நிலையில் இதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் குவிந்து வருகின்றனர்.

  பாவம்யா ஜெ.தீபா

  ஐடி ரெய்டும் காமெடியாம்...பாவம்யா ஜெ.தீபா... என்கிறார் இந்த வலைஞர்

  நல்லா பாருங்கய்யா

  வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி ஜெ.தீபா வீட்டிற்கு வந்த நபர் தப்பியோட்டம்
  நல்லா பாருங்கய்யா அது டிரைவர் ராஜாவா இருக்க போறார்

  தூங்கி எந்திருச்சுருக்காதே

  ஜெ.தீபா வீட்டில் காலை முதல் ஐடி ரெய்டு #செய்தி
  பேபிம்மா இன்னும் தூங்கி எந்திருச்சுருக்காதே.. என கலாய்க்கிறார் இந்த வலைஞர்

  எப்படிடா திருட மனசு வந்துச்சு

  தீபா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து சோதனையிட்டவர் போலீசை கண்டதும் தப்பி ஓட்டம் - செய்தி
  இந்த குழந்தை முகத்த பாத்தும் கூட உங்களுக்குலாம் எப்படிடா திருட மனசு வந்துச்சு.. என்கிறது இந்த டிவிட்

  தீபா கண்ணுல மாட்டல..

  தீபா வீட்டுக்கு வந்த போலி ஐடி அதிகாரி - செய்தி#
  நல்லவேளை தீபா கண்ணுல மாட்டல. மாட்டியிருந்தால் "டே...பொறம்போக்கு, கஸ்மாலம், பன்னாடை நாயே" என்று திட்டியிருப்பார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens sharing their views on Deepa's house IT raid incident.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற