For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போதும் சாமி எங்களுக்கு இன்னொரு அம்மாவும் வேணாம், சின்ன அம்மாவும் வேணாம்.. பூமி தாங்காது!

ரஜினிகாந்தின் நேற்றை அனல்பறக்கும் பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகீரப்பட்டு வருகின்றன.

Google Oneindia Tamil News

Recommended Video

    எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்த ரஜினியின் பரபரப்பு பேச்சு- வீடியோ

    சென்னை: ரஜினிகாந்தின் நேற்றைய அனல்பறக்கும் பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

    நேற்று நடைபெற்ற எம்ஜிஆர் கல்வி நிறுவன விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னால் எம்ஜிஆர் ஆட்சியை கொடுக்க முடியும் என ரஜினி பேசினார்.

    ரஜினியின் இந்த பேச்சை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில..

    பூமி தாங்காது

    என்னால் எம்ஜிஆர் ஆட்சியை கொடுக்க முடியும் _ ரஜினிகாந்த் போதும் சாமி எங்களுக்கு இன்னொரு அம்மாவும் வேணாம் இன்னொரு சின்ன அம்மாவும் வேணாம் பூமி தாங்காது என்கிறார் இந்த நெட்டிசன்

    நடிப்பை மட்டும் பாருங்கள்

    அரசியலுக்கு வர வேண்டாம். படிப்பை மட்டும் பாருங்கள் - #ரஜினிகாந்த்
    நீங்களும் அரசியலுக்கு வர வேண்டாம். நடிப்பை மட்டும் பாருங்கள் _ மக்கள்.. என கலாய்க்கிறது இந்த டிவிட்

    நீங்களும் பாத்ரூம் சிங்கரா?

    "ஜெயலலிதா இருக்கும் போதே குரல் கொடுத்தவன் நான். எனக்கு பயம் கிடையாது!" : ரஜினிகாந்த்
    என்ன.. நீங்களும் பாத்ரூம் சிங்கரா.? என கேட்கிறார் இந்த வலைஞர்

    கலச்சுபுட்டீகலேப்பு

    தமிழை பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும் - ரஜினிகாந்த் @superstarrajini
    தலைவா! இப்படி ஒரே ஸ்டேட்மென்ட்ல அம்புட்டு லெட்டர் பேட் கட்சியையும் கலச்சுபுட்டீகலேப்பு! என கிணண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்

    ஓய்வெடுக்கும் காலத்தில்

    படிக்கும் காலத்தில் அரசியலுக்கு வர வேண்டாம் மாணவர்களுக்கு ரஜினி அறிவுரை - செய்தி
    ஓய்வெடுக்கும் காலத்தில் அரசியலுக்கு வர வேண்டாம் ரஜினிக்கு மாணவர்கள் அறிவுரை..!! என கலாய்க்கிறது இந்த டிவிட்

    English summary
    Netizens sharing their views on Rajini's speech. Rajini has said he will give MGR govt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X