சித்து இப்படியே பேசுங்க.. தமிழகத்துல ஒரு சீட் கூட கிடைக்காது.. ஓட்டும் நெட்டிசன்கள் #sidhu
சென்னை: பாகிஸ்தானை விட சென்னை மோசம் என்று கூறி உலகத் தமிழர்களின் வாயில் விழுந்துள்ளார் "சிக்ஸர்" சித்து. சித்துவை சமூக வலைதளங்களில் தமிழர்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இது தென் மாநிலத்துக்கே அவமானம் என்று கூறி சித்துவை திட்டி வருகின்றனர்.
சென்னையில் என்னால் இருக்க முடியாது, இட்லி சாப்பிட முடியாது. ஒத்துப் போகாது. அதுவே பாகிஸ்தான் என்றால் நல்லாருக்கு, கிட்டத்தட்ட என் ஊர் மாதிரிதான் அந்த நாட்டு பஞ்சாபும் இருக்கு என்று பேசியிருக்கிறார் சித்து. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த நாட்டில் வாழ முடியாது, வசிக்க முடியாது, சகிக்க முடியாது, சாப்பிட முடியாது.. ஆனால் அண்டை நாடு சுகமாக இருக்கிறது என்று சித்து பேசியிருப்பது பெரும் சலசலப்பையும், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சித்துவை சமூக வலைதளங்களில் மக்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
|
கார்கில் நிதியைப் பாருங்க ஜி
#சித்து க்கு #இட்லி பிடிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை.அதென்ன தமிழ்நாட்டை பத்தி பேசுறது.......
முதல்ல #கார்கில் நிவாரண நிதியோட லிஸ்ட பாரு....
#பாரி வள்ளல் பரம்பரையடா......
|
ஹர்பஜனை கோர்த்து விட்ட அன்பர்!
தலைவா நம் இனத்தை சித்து தப்பா பேசியிருக்கான் தலைவா அவனை செவுள்லயே ஒண்ணு வெய் தலைவா
|
அதைத்தான் நாங்களும் சொல்றோம்
#சித்து சொன்னதில் பிழையில்லை... தமிழர்களின் மொழி, உணவு, உடை, கலாச்சாரம், பண்பாடு வடநாட்டவரோடு ஒருபோதும் ஒத்துப்போகாது.!
இதைத்தான் நாங்களும் சொல்கிறோம் எங்களது இனம், மொழி, உணவு, உடை, கலாச்சாரம், பன்பாடு முதலியவற்றைக் காக்க #தமிழ்தேசியம் வேண்டும் என்று.!!
|
ஹர்பஜனிடம் கேளுங்கள்
பாகிஸ்தானுக்கு செல்வது தமிழ்நாட்டுக்கு செல்வதைவிடச்சிறந்தது #சித்து. அரே டர்பன்கார் தமிழும் தமிழனின் அருமையை Bajji @harbhajan_singh இடம் கேள். Better You can Know about Tamil, Tamilan and Tamilnadu's love from our Harbhajan
|
வெட்கப்பட வேண்டும் சித்து
உங்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. நாட்டுக்காக உயிரையே கொடுப்பவர்கள் தென்னிந்தியர்கள். காங்கிரஸிடமிருந்து கற்றுக் கொண்ட அசிங்கமான பாடத்தையெல்லாம் உங்களுடனேயே வச்சுக்கங்க.
|
அது வேறு இது வேறு
இது டைம்லி நெத்தியடி!
|
ஒரு சீட் கூட கிடைக்காது காங்கிரஸுக்கு
சித்து இப்படியே பேசிட்டிருங்க. தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!











Click it and Unblock the Notifications