ஓணம் புடவையெல்லாம் இல்ல.. பீரோல பழையபூனம் புடவைதான் இருக்கு.. அத வேணா கட்டிட்டுப் போ!
சென்னை: ஓணம் பண்டிகை என்பதால், கேரள சேலை கட்டி வளைய வரும் நம் தமிழ்ப் பெண்களை நகைச்சுவையாக கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கேரள மாநிலத்தவர் பலர் இருப்பதால், இங்கும் ஓணம் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின் சிறப்பம்சங்களில் ஒன்றான மலர்க் கோலம், சிறப்பு உணவு விருந்து, கேரள சேலை என தமிழ் மக்களும் ஓணத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றனர்.

அதிலும் கல்லூரி, அலுவலகங்களில் இளம் பெண்களும், இளைஞர்களும் ஓணம் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர். இதனால் சமூகவலைதளங்களில் எல்லாம் ஓணம் சேலை கட்டிய பெண்கள் மற்றும் வேட்டி கட்டிய ஆண்களின் புகைப்படங்கள்தான்.
விடுவார்களா நம் மீமர்கள்.. வழக்கம் போல ஓணம் வாழ்த்துகளோடு, இந்த ஓணம் ஸ்பெஷல் ஆடைகளை அணிந்தவர்களையும் நகைச்சுவையாக கலாய்த்து தள்ளி விட்டனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications